இலங்கை குண்டு வீச்சு: தமிழர் வீடுகள் சேதம்!
கொழும்பு:தமிழர் பகுதியான வாகரையில் இலங்கை விமானப் படை நடத்திய சரமாரிதாக்குதலில் வெருகல் முருகன் கோவில் அருகே ஐ.நா.வால் கட்டித் தரப்பட்டதண்ணீர்த் தொட்டி முழுமையாக சேதமடைந்தது. தமிழர்கள் குடியிருப்புகள் மீதும்சரமாரியாக குண்டுகளை வீசி ராணுவம் தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்தன.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்கள் குடும்பம்குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் வாகரை பிராந்தியத்தில் இலங்கை விமானப்படை விமானங்கள்சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் வெருகல் முருகன் கோவில்பகுதியில் உள்ள ஐ.நா. சபையால் கட்டித் தரப்பட்ட மேல் நிலைத் தண்ணீர்த் தொட்டிமுற்றிலும் சேதமடைந்தது.
முருகன் கோவிலைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதியைச்சேர்ந்தோர் குற்றம் சாட்டினர். இதேபோல முல்லைத் தீவு பகுதியில் ராக்கெட்குண்டுகளை வீசி இலங்கை படைகள் வெறித் தாக்குதல் நடத்தின.
இதில் 10க்கும் மேற்பட்ட தமிழர் வீடுகள் சேதமடைந்தன. 5 தமிழர்கள்காயமடைந்தனர். கடந்த 24 மணி நேரமாக இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்நடந்ததுள்ளது.
இதே பகுதியில் உள்ள ஐ.நா. சபைக்கான முல்லைத் தீவு மாவட்ட வளர்ச்சித் திட்டபிரதிநிதியின் வீடும் தாக்குதலில் சேதமடைந்தது. மேலும் கிறிஸ்தவகன்னியாஸ்திரிகள் தங்கியிருந்த விடுதி ஒன்றும் சேதமடைந்தது.
வாகரையிலும் தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்தத் தாக்குதலில் பலகால்நடைகள் கொல்லப்பட்டன.
தமிழ். எம்.பி. கண்டனம்:
இலங்கை விமானப்படை தாக்குதலுக்கு தமிழ் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்வெருகல் பகுதித் தமிழர்கள் தண்ணீரின்றி அவதிப்படட்டும் என்ற கிரிமினல்நோக்கத்துடன்தான் தண்ணீர்த் தொட்டியை தகர்த்துள்ளனர்.
இது போர் நிறுத்த மீறல் மட்டுமல்ல, மனித உரிமை மீறல், போர்க் குற்றச் செயலாகும்.தமிழர்களை அவர்களது பகுதிகளிலிருந்து விரட்டியடித்து வருகிறது இலங்கை அரசு.
முத்தூர் பகுதியில் தமிழர்களை விரட்டி விட்டு அங்கு அணல் மின் நிலையம்,வேதியியல் தொழிற்சாலைகளை நிறுவி தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கத்திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications