ரெளடிகள் வேட்டை தொடரும்: லத்திகா சரண்
சென்னை:சென்னை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்துஅவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் எச்சரித்துள்ளார்.
சென்னையைக் கலக்கி வந்த பிரபல தாதா பங்க் குமார் நேற்று சென்னை அருகேதிருநீர்மலையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது உடல் இன்றுகுரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பங்க் குமார் என்கவுண்டர் குறித்து லத்திகா சரண் கூறுகையில்,ரவுடிகளை சுட்டுக் கொல்ல நாங்கள் நினைக்கவில்லை. அவர்களை உயிருடன்பிடிக்கத்தான் விரும்புகிறோம். இதே பங்க் குமார் 7 முறை குண்டர் சட்டத்தின் கீழ்அடைக்கப்பட்டவன்தான்.
இப்போதும் கூட அவனைப் பிடிக்கத்தான் போலீஸார் முயற்சித்தனர். ஆனால்அவர்களை பங்க் குமார் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக போலீஸார் சுட நேர்ந்தது.இதில் அவன் உயிரிழந்து விட்டான்.
சென்னை நகரில் ரவுடிகள் சுதந்திரமாக நடமாட முடியாது. அதை காவல்துறைஅனுமதிக்காது. தொடர்ந்து ரவுடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்றார் லத்திகா சரண்.
இதற்கிடையே, நேற்றைய என்கவுண்டரின்போது தப்பி ஓடி விட்ட பங்க் குமாரின் 3கூட்டாளிகளையும் பிடிக்க போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர். விரைவில் அவர்களை பிடிப்போம் என போலீஸார் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications