அணை: டெல்லியில் 18ம் தேதி அமைச்சர்கள் பேச்சு
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைவருகிற 18ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரளஅரசு முன்வரவில்லை. மாறாக தங்களது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதன்படி கடந்த 29ம் தேதி டெல்லியில்மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஜோஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர்அச்சுதானந்தனும் சந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. அதேசமயம், இரு மாநில அமைச்சர்கள்சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதுவும் ஜோஸ் முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வருகிற 18ம் தேதி டெல்லியில்நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமைப் பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.
கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுபேச்சுவார்த்தைக்கு வரவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து இரு மாநிலமுதல்வர்களும் மீண்டும் சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைவருகிற 18ம் தேதி டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில்நடைபெறவுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கேரளஅரசு முன்வரவில்லை. மாறாக தங்களது மாநில சட்டசபையில், அவசரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதன்படி கடந்த 29ம் தேதி டெல்லியில்மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஜோஸ் முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர்அச்சுதானந்தனும் சந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. அதேசமயம், இரு மாநில அமைச்சர்கள்சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதுவும் ஜோஸ் முன்னிலையில் டெல்லியில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரு மாநில அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வருகிற 18ம் தேதி டெல்லியில்நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமைப் பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்கிறது.
கேரள அரசின் சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுபேச்சுவார்த்தைக்கு வரவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து இரு மாநிலமுதல்வர்களும் மீண்டும் சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக

Click it and Unblock the Notifications