பிரபல ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை!
சென்னை:
சென்னையைக் கலக்கி வந்த பிரபல ரவுடி பங்க் குமார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைசத் சேர்ந்தவர் குமார் என்கிற பங்க் குமார்.கொத்தவால்சாவடி குமார் என்றும் இவர் அழைக்கப்பட்டார். நந்தனம் கலைக் கல்லூரியில் பி.ஏ. படித்தவர் குமார்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ரவுடிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் குமார். இவரதுநெருங்கிய நண்பரான பிரபல ரவுடி உமர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இதையடுத்து நண்பனைக்கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக இவரும் ரவுடியானார். அன்று ஆரம்பித்தது குமாரின் ரவுடி வாழ்க்கை.
அதன் பின்னர் சென்னை மாநகரமே நடுங்கும் வகையிலான பயங்கர ரவுடியாக மாறினார் குமார். அவருக்கென்றுபெரும் கூட்டம் சேர்ந்தது. அதன் பின்னர் சைதாப்பேட்டையை மையமாகக் கொண்டு பங்க் குமார் செயல்படஆரம்பித்தார்.அவர் மீது 40க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 3 கொலை வழக்குகளும் உள்ளன. 7 முறைகுண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் குமார். இடையில் ஒருமுறை பாமகவில் சேர்ந்தார்.
![]() |
சமீப காலமாக கொலை உள்ளிட்டவற்றை விட்டு விட்டு கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார் குமார். ஆனால்கடந்த 6 மாதமாக அவரை எங்கும் காணவில்லை. தலைமறைவாகி விட்ட அவரை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை பெங்களூரில் பங்க் குமாரும், அவரது டிரைவரும் சுற்றி வளைக்கப்பட்டதாகதகவல்கள் வெளியாகின. குமாரைத் தேடி பெங்களூருக்கு வந்த சென்னை போலீஸார், பங்கேஷ்வர் நகர் என்றஇடத்தில் ஏடிஎம் மையத்திலிருந்து பங்க் குமார் பணம் எடுத்து விட்டு வெளியே வந்தபோது சுற்றி வளைத்துப்பிடித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் நேற்று இரவு வேறு மாதிரியான நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை புறநகரான திருநீர்மலை,சீனிவாசா நகரில் வைத்து போலீஸாருடன் நடந்த மோதலில் பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார்தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பங்க் குமாரின் கூட்டாளி ஒருவன், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பஷீர்என்பவரிடம் ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். திருநீர்மலை சீனிவாசா நகர் பைபாஸ் சாலைக்குபணத்துடன் வரும்படி கூறினர்.
இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தார் பஷீர். உடனடியாக மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் குமாரின்கூட்டாளிகளைப் பிடிக்க வலை விரித்தனர்.டாடா சுமோ கார் ஒன்றில் நேற்று இரவு 7.30 மணியளவில், பங்க் குமார் தனது கூட்டாளிள் 3 பேருடன் அங்குவந்தார். அந்த இடத்தில் மறைந்திருந்த மத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் காரை வழிமறித்துநிறுத்த முயற்சித்தார்.
போலீஸாரைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பங்க் குமார் போலீஸார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்.மேலும் அரிவாளால் தாக்கவும் முயன்றார். இதைத் தொடர்ந்து தில்லை நடராஜன் தற்காப்புக்காக, பங்க் குமாரைநோக்கி சுட்டார். இதில் குண்டு பாய்ந்து பங்க் குமார் சுருண்டு விழுந்தார்.
குமாருடன் இருந்த மற்ற 3 கூட்டாளிகளும் தப்பி ஓடி விட்டனர். சுருண்டு விழுந்த குமாரை குரோம்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
பங்க் குமாரின் தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார்,பூமாறன் ஆகியோர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட் ஆகியோர் சந்தித்து நலம்விசாரித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தையும் ஆணையர் லத்திகா சரண் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். குமார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கிடுகிடுக்க வைத்த பங்க் குமார்:
நீண்ட தலைமுடியுடன் இருப்பதால்தான் குமாருக்கு பங்க் குமார் என்று பெயர் வந்தது. அந்தப் பெயர்பிரபலமானதால் தன்னை எல்லோரும் பங்க் குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார் குமார்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதேபோல சிறு வயதிலிருந்தே ரவுடித்தனத்தின்அடையாளமாக காணப்பட்டார் குமார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஏகப்பட்ட ரவுடிகளுடன் சகவாசம்இருந்தது. அதில் முக்கியமான ரவுடி உமர்.
உமர், பங்க் குமாருடன் மிகவும் நெருங்கிப் பழகினார். தான் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களுக்கும்,அடிதடி உள்ளிட்ட இடங்களுக்கும் குமாரையும் கூட்டிச் செல்வார். கிட்டத்தட்ட குமாரின் குரு போல இருந்தார்உமர்.
இந்த சமயத்தில்தான் ஒரு ரவுடிக் கும்பலால் உமர் போட்டுத் தள்ளப்பட்டார். ஆவேசமானார் குமார். நண்பனைக்கொன்றவர்களைப் பழிவாங்க உறுதி பூண்டார். படிப்பை முடித்து விட்டு ரவுடியாக மாறினார்.
உமரைக் கொலை செய்த பரமேஸ்வரன் உள்ளிட்ட கும்பலை அடுத்தடுத்து போட்டுத் தள்ளியது பங்க் குமார்கும்பல். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற குமார் குண்டர் தடுப்புச சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
பின்னர் வெளியே வந்த அவர் உமர் கொலை வழகில் சம்பந்தப்பட்ட புருஷோத்தமன், சம்பத் ஆகியோரைசைதாப்பேட்டை கோர்ட் வளாகத்தில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றார்.
அதைத் தொடர்ந்து திரும்பவும் உள்ளே சென்ற பங்க் குமார், சிறைக்குள் இருந்தபடியே சைதாப்பேட்டையைச்சேர்ந்த பரட்டை முருகன் என்ற ரவுடியை தனது ஆட்கள் மூலம் தீர்த்துக் கட்டினார்.
பின்னர் வெளியே வந்ததும் கட்டப் பஞ்சாயத்து, கூலிக்கு ஆட்களை கடத்துவது, அடிப்பது, கற்பழிப்பு எனபல்வேறு சமூக விரோத செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் குமார்.
கடந்த 2002ம் ஆண்டு தனது மனைவி லலிதாவின் தங்கை ஹேமாவை துப்பாக்கி முனையில் பெங்களூருக்குக்கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை கற்பழித்தார். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பங்க் குமாரின் அட்டகாசம் தொடர்ந்து வந்த நிலையில் இவரது கொட்டத்தைஅடக்க போலீஸார் குறி வைத்தனர்.
மேற்கு மாம்பலத்தில் ஒருமுறையும், சைதாப்பேட்டையில் ஒருமுறையும் போலீஸார் குமாரை முடிக்கதிட்டமிட்டனர். ஆனால் இருமுறையும் அவர் தப்பி விட்டார். இதையடுத்து டெல்லிக்குச் சென்று முக்கிய எம்.பி.ஒருவரிடம் தஞ்சம் புகுந்தார்.
பின்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்த குமார், கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடசீட் கேட்டார். ஆனால் கட்சி கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் திருந்தி வாழ விரும்புவதாக கூறி மாநகரகாவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார்.
அதன் பின்னர் பங்க் குமார் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பெங்களூரில்பிடிபட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இரவில் போலீஸாருடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications