பெரியார் சிலை: திருமாவளவன் கைது
சென்னை:திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையஉண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து மீண்டும் அதே இடத்தில் சிலையை நிறுவகோரி விடுதலைச் சிறுத்தை கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை போலீஸார்கைது செய்தனர்.
பெரியார் சிலை தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று சென்னை மெமோரியல்ஹால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅறிவித்திருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கணக்கானதொண்டர்கள் திரண்டனர். அவர்களுக்கிடையே திருமாவளவன் பேசுகையில்,திருவரங்கத்தில் அனுமதி பெற்ற இடத்தில் பெரியார் சிலையை வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
ஆனால் அதை திட்டமிட்டு சதி செய்து சில விஷமிகள் தகர்த்துள்ளனர். இந்த செயலில்ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து மீண்டும் அதே இடத்தில்சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.பின்னர் திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்துஅழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications