செம்மொழி: கருணாநிதி தலைமையில் 2 குழுக்கள்
சென்னை:தமிழ் செம்மொழி நிறுவனத்தை நிர்வகிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் ஐம்பெருங்குழு மற்றும்எண்பேராயம் என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல்வரின் மகள் கவிஞர் கனிமொழியும்இடம்பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் கருணாநிதி 29.11.2006 அன்று டெல்லியில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கைசந்தித்துப் பேசினார்.
தமிழ் செம்மொழிக்கென தனியாக ஒரு நிறுவனத்தை சென்னையில் உருவாக்கிட மத்திய அரசு முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 11ம் ஐந்தாண்டுத் திட்டக் கருத்துருக்களில் சென்னையில்செம்மொழி தமிழ் நிறுவனத்தை ஏற்படுத்திடத் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டு இணைக்கப்படும் என்றுமுதல் அமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பினார்.
செம்மொழி தமிழுக்கென சென்னையில் அமையவுள்ள மத்திய அரசின் நிறுவனத்திற்கான உரிய திட்டவரைவுகளைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பிடவும், தொடர்ந்து சென்னையில் அமையவுள்ள மத்தியஅரசு நிறுவனத்தை நிர்வாகம் செய்திடவும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என இரண்டு குழுக்களைஅமைக்கலாம் என்ற பரிந்துரை தமிழக அரசினால் மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சருக்குஅனுப்பிவைக்கப்பட்டது.
இந்தக் குழுக்களுக்கு முதல்வர் கருணாநிதி தலைவராகவும், துணைத் தலைவர்களாக வி.ஐ.சுப்ரமணியன், வா.செ.குழந்தைச்சாமி இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐம்பெருங்குழுவில், அவ்வை நடராஜன், மணவை முஸ்தபா, கவிஞர் வைரமுத்து, பி.பி.ராஜராஜேஸ்வரி, கவிஞர்கனிமொழி ஆகியோர் உறுப்பினர்களாகவும், எண்பேராயம் குழுவில் மா.நன்னன், கவிக்கோ அப்துல் ரகுமான்,சிலம்பொலி செல்லப்பன், கவிஞர் வாலி, கவிஞர் வேழவேந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா,டி.ரவிக்குமார் எம்.எல்.ஏ, வா.மு.சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
தமிழக அரசின் இந்தப் பரிந்துரையை ஏற்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் உரிய ஆணைகளைப்பிறப்பித்துள்ளார்.
செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கும், இட ஒதுக்கீடு சமூக நீதிக்கும் உறுதியான ஒத்துழைப்பினை நல்கி வரும்அமைச்சர் அர்ஜூன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 25ம் தேதி கலைவாணர் அரங்கில்மாலை 5 மணியளவில் தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications