கள்ள நோட்டு வழக்கு: ஜனனி விடுதலை
மதுரை:கள்ள நோட்டு வழக்கிலிருந்து இளம் பெண் ஜனனி, அவரது தாயார் மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரைமதுரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜனனி. இவர் காரில் கஞ்சா கடத்தியதாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்குதொடரப்பட்டது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு ஜனனி மிகவும் நெருங்கியதொடர்புடையவர் என்பதால் இந்த பழிவாங்கும் வழக்கு போடப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் ஜனனி, தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டனர். விடுதலை ஆன உடனேயே இவர்கள் மீது கள்ள நோட்டு வைத்திருந்ததாக புதிய வழக்குபோடப்பட்டது.
கஞ்சா வழக்கில் ஜனனி கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டிலிருந்து ரூ. 1 கோடியே 40 லட்சத்த 18 ஆயிரம்ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தில் ரூ. 30 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டு இருப்பதாக கூறிகள்ள நோட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தப் பணத்தில் உள்ள எண்கள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் விளக்கம் அளித்தது. அதில், ஜனனி கைதுசெய்யப்படுவதற்கு முன்பே இந்த எண்கள் கொண்ட நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதாக அந்தவிளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து நேற்றுஇந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் கள்ள நோட்டு அல்லஎன்று ரிசர்வ் வங்கி கூறி விட்டதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் இந்த வழக்கிலிருந்தும் விடுதலையாகியுள்ளனர். இருப்பினும்,இந்தக் கள்ள நோட்டு தொடர்பான வழக்கை போலீஸார் இன்னும் நிலுவையில் வைத்துள்ளனர்.
எனவே, போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை காட்டி, போலீஸார் தொடர்ந்து வழக்குதவறானது என்று கீழ் நீதிமன்றத்தில அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னரே இந்த வழக்கிலிருந்துஜனனி உள்ளிட்டோர் முழுமையாக விடுதலை ஆக முடியும்.
அதேசமயம், ஜனனியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை தொடர்ந்தவழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications