பெரியார்-சாமி சிலைகள்: ஜெ திடீர் கண்டனம்
சென்னை:ஸ்ரீரங்கம் பெரியார் சிலை தகர்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கோவில்கள் மீதான தாக்குதல்களைநினைத்து அனைவரும் வெட்கித் தலை குணிய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில விஷமிகள் தலையைத் துண்டித்து அவமரியாதை செய்தனர்.இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சாமிசிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் அமைதியாய் இருந்து வந்தார் ஜெயலலிதா.இது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் இப்போது சிலைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வேதனைக்குரிய ஒன்றாகும்.இதற்காக எல்லோரும் வெட்கித் தலை குணிய வேண்டும்.
சுயமரியாதைக் கொள்கை, பகுத்தறிவுக் கொள்கை, பெண் விடுதலைக் கொள்கையை பரப்பிய வைக்கம் வீரர்பெரியார், காலம் உள்ளவரை மதிக்கப்பட வேண்டிய ஒரு தலைவர்.
சமூகப் போராளியான, எல்லோராலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு தலைவரான பெரியார், குறிப்பிட்ட எவருக்கும்சொந்தமானவர் அல்ல. அவர் இந்த நாட்டுக்கே சொந்தமானவர். அவரது புகழுக்கும், பெயருக்கும் கலங்கம்ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைவரின் கடமையும் ஆகும். பெரியார் மட்டுமல்லாது, அவரைப்போன்ற மனித குலமேதைகள், சலியாத உழைப்பைத் தந்த உத்தமர்கள் சிறுமைப்படுத்தப்படக் கூடாது.
பெரியார் சிலை தாக்கப்பட்ட சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் கோவில்களை நாசப்படுத்தியும், சுவாமிசிலைகளை சேதப்படுத்தியும், குறிப்பிட்ட பிரிவினரைத் தாக்கியும் உள்ளனர். இதற்கு எதிராக போராட்டம் நடத்தகுறிப்பிட்ட பிரிவினர் அனுமதி கேட்டபோது, அதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. அத்தோடு நில்லாமல் அந்தஅமைப்புகளின் தலைர்களை கைது செய்துள்ளனர்.
இந்த செயல் ஒரு சர்வாதிகாரப் போக்காகும். சமுதாயத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள்உண்டு. நியாயமான காரணத்திற்காக தங்களது எதிர்ப்புகள், அதிருப்தியை வெளியிட்டு போராட்டம் நடத்தஅனைவருக்கும் சம உரிமை உண்டு.
அதை விட்டு விட்டு கைது செய்வது என்ற சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது.இப்படிப்பட்ட சர்வாதிகார திமுக சிறுபான்மை ஆட்சி, வெகு நாட்களுக்கு நீடிக்காது. இவர்களை விரைவில்மக்கள் தூக்கி எறிவார்கள்.
எனது ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இப்படிப்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சம்பவம் ஒன்று கூடநடந்ததில்லை. ஆனால் தற்போதைய திமுக மைனார்ட்டி ஆட்சியில் வேண்டும் என்றே இத்தகைய விரும்பத்தகாகசம்பவங்களை தூண்டி விட்டு வருகிறார்கள் ஆட்சியாளர்கள். ஜாதி துவேஷம், கலவரம் போன்றவற்றைஆட்சியாளர்களே தூண்டி விடுகிறார்கள்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்ட அதே நாளில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டசெயல் என்பது தற்செயலான ஒன்று போலத் தெரியவில்லை. எம்ஜிஆர் சிலை நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் திட்டமிட்ட செயலோ என சந்தேகம்ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் பலமுறை நடந்ததுண்டு.
நான் முதல்வராக இருந்தபோது, வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரைச் சந்தித்து முறையிட்ட அதே நாளில்,நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பப்பட்டது. இந்த வெடிகுண்டு புரளி தெற்கில் இருந்துவந்ததாக மத்திய உளவுப் பிரிவு தெரிவித்தது. ஆனால் இந்த வழக்கில் இதுவரை குற்றவாளி யாரும் கைதுசெய்யப்படவில்லை. இதிலிருந்தே இப்படிப்பட்ட செய்திகளை யார் பரப்பியிருக்கக் கூடும் என்பது தெரிய வரும்.
குறிப்பிட்ட இனத்தினரை, ஜாதியினரை குறி வைத்து தாக்குவதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பதுகண்டனத்துக்குரிய செயலாகும். தமிழகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கைஉள்ளவர்கள். சிலர் கடவுளே இல்லை என்ற கொள்கை கொண்டவர்கள்.
இருவரும் அவரவரர் விருப்பத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. இந்த இரு தரப்பினரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால் இந்த அரசு அந்தக் கடமையிலிருந்து தவறி விட்டது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications
