மதுரை: கருணாநிதிக்கு நாளை டாக்டர் பட்டம்
மதுரை:மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை முதல்வர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்வழங்கப்படுகிறது. இதை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்குகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 40வது பட்டமளிப்பு விழா நாளை காலை 11 மணிக்கு ராஜா முத்தையாமன்றத்தில் நடக்கிறது. இவ்விழாவுக்கு பர்னாலா தலைமை தாங்குகிறார்.
இதில் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவைக்காக கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதில் என்டிபிசிலிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சங்கரலிங்கம் அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகதுணைவேந்தர் மருதமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாளை காலை 7.30 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் கருணாநிதி அரசு சுற்றுலா மாளிகைக்குஓய்வெடுத்துவிட்டு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாமுடிந்ததும் பிற்பகலே சென்னை திரும்புவார்.
ஆளுநர், முதல்வர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விழா பல்கலைக்கழகத்தில் நடக்காமல் ராஜா முத்தையா மன்றத்தில்நடப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் சென்டிமெண்ட் இருக்கிறதாம்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து போனால் பதவி காலியாகும் உடல் நிலைபாதிக்கப்படும் என ஒரு சென்டிமெண்ட் உண்டு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications