ஜெ. சொல்வது அப்பட்டமான பொய்-கருணாநிதி
சென்னை:தமிழக அரசின் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதுஅப்பட்டமான பொய் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல்நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் ஜெயலிலதா கூறியுள்ளதுகுறித்து கேட்டனர்.
அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், அந்த அம்மையாரின் கூற்றுக்கு ஏற்கனவே உணவு அமைச்சர் ஏ.வ.வேலுவிளக்கமாக பதிலளித்து விட்டார்.
நானும் இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.அப்போதுதான் அம்மையார் சொன்னது அப்பட்டமான பொய் என்றும், இன்று வரையில் அந்தப் பகுதிகளில்,நெல் கொள்முதல் நடந்து வருகிறது என்றும் குறுவை அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையிலும் கூடதொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார் என்றார்கருணாநிதி.
புதிய அடுக்குமாடி கட்டிடம்:
இதற்கிடையே சென்னையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பழுதடைந்த சென்னை குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாகக் குடியிருப்புகள் கட்ட கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது இதற்கான வாக்குறுதியை அளித்தார் கருணாநிதி.
அதன்படி மெரீனா நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையில் உள்ள முழுமையாகப் பழுதடைந்த 2,862குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக 2,862 குடியிருப்புகள் கட்டவும்,சுனாமியில் பாதிக்கப்பட்ட 4,458 குடும்பங்களுக்கு புதிதாக அடுக்கு மாடியிருப்புக்கள் ரூ. 128 கோடி செலவில்கட்டித் தரவும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications