லிப்ட்டில் சிக்கிய பல்கலை. பேராசிரியர்கள்
சென்னை:சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 9 பேர் லிப்ட்டில் சிக்கிக் கொண்டனர். சுமார் ஒரு மணி நேரபோராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றும் சித்ரா, நளினி ரவீந்திரன், மேரி, லிண்டா, அலி,பன்னீர் செல்வம், ஷேக், ரகுராமன், கோதண்டராமன் ஆகியோர் நேற்று மாலை தரைத்தளத்திலிருந்து 2வதுமாடிக்கு லிப்ட் மூலம் சென்றனர்.
அப்போது முதல் மாடிக்கும், தரைத்தளத்திற்கும் இடையே திடீரென லிப்ட் நின்று விட்டது. இதனால் உள்ளேஇருந்த பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உதவி கேட்டு குரல் எழுப்பினர். அவர்களது கதறலைக் கேட்டஊழியர்களும், பிற பேராசிரியர்களும் 9 பேரையும் மீட்க முயற்சித்தனர்.
ஆனால் அவர்களால் பழுதை நீக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லிப்ட்டின் பழுதை நீக்கி 9 பேரையும் மீட்கும்முயற்சியை ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் லிப்ட் சரி செய்யப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டது.அதன் பின்னரே 9 பேராசிரியர்களும் வெளியே வந்தனர். அந்த லிப்ட்டில் அதிகபட்சம் 8 பேர்தான் செல்லமுடியும். கூடுதலாக ஒருவர் ஏறி விட்டதால் செல்ல முடியாமல் நடு வழியில நின்று விட்டதாக தீயணைப்புத் துறைஅதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications