பெண்களை வீடு புகுந்து கற்பழித்து வந்த பங்க்

Subscribe to Oneindia Tamil

Punk Kumarசென்னை:சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி பங்க் குமாரை போலீஸார் பெங்களூரிலேயே கைது செய்துவிட்டதாகவும், சென்னைக்கு அழைத்து வந்து கொன்று விட்டதாகவும் அவனது தாயார் சரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தென் சென்னையைக் கலக்கிய பிரபல தாதா பங்க் குமார். ஏகப்பட்ட குட்டி ரவுடிகளை தனது பாக்கெட்டில்போட்டுக் கொண்டு தென் சென்னையின் சட்டவிரோத சாம்ராஜ்யத்தை ஆட்டிப் படைத்து வந்தவர் பங்க் குமார்.

இவர் 12ம் தேதி இரவு சென்னை அருகே திருநீர்மலையில் இரவு 7 மணியளவில் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பங்க் குமாரை பிடிக்கப் போனபோது அவர் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசித்தாக்க முயன்றதாகவும், அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், அதனால் தற்காப்புக்காக போலீஸார் அவனைசுட்டு கொன்றதாகவும் மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறினார்.

Punk Kumar wife Lalitha and Child

ஆனால் இதை பங்க் குமாரின் தாயார் சரோஜா மறுக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகனைசென்னை போலீஸ் படை பெங்களூரிலிலேயே 12ம் தேதி காலை கைது செய்து விட்டது. இதை எனது மருமகள்காலையிலேயே போன் செய்து கூறி விட்டார்.

இந்த நிலையில் மாலையில் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். வெடிகுண்டு வீசியதாக போலீஸார்கூறுகிறார்கள். காலையிலேயே போலீஸார் கஸ்டடிக்கு வந்து விட்ட அவனிடம் எப்படி குண்டு வந்திருக்கும்.எனவே போலீஸார்தான் திட்டமிட்டு எனது மகனைக் கொன்று விட்டனர் என்றார் சரோஜா.

Punk Kumar

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பங்க் குமாரின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுபின்னர் அவரது மனைவி லலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தனது மகள் தீபிகாவை கட்டிப் பிடித்துக்கொண்டு லலிதா அங்கிருந்த போலீஸாரை நோக்கி ஆவேசமாக கத்தினார்.

நானும் அவரது மனைவிதான். இது அவரது மகள்தான். எங்களையும் சுட்டுக் கொன்று விடுங்கள். எங்களைமட்டும் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் என்று ஆவேசமாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரைஉறவினர்கள் அமைதிப்படுத்தி உடலைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பிற்பகல் 1.30 மணியளவில் குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர்ஆம்புலன்ஸ மூலம் உடல் சைதாப்பேட்டையில் உள்ள குமாரின் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உடல் ஒப்படைக்கப்படுவதையொட்டி குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்திலும்,சைதாப்பேட்டையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், குரோம்பேட்டை மருத்துவமனைக்கு வந்து விசாரணைமேற்கொண்டார். பின்னர் குமாரின் தாயார், மனைவி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். அதன் பின்னர்குமாரின் உடலைப் பார்க்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குமாரின் உடலைப் பார்த்து மனைவி லலிதா, மகள் தீபிகா, தாயார் சரோஜா ஆகியோர் கதறி அழுதனர். அதன்பின்னர் பிரேதப் பரிசோதனை தொடங்கியது. முதுகுத் தண்டில் பாய்ந்திருந்த குண்டை டாக்டர்கள் அகற்றினர்.பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

கொடூர கற்பழிப்புகள்:

இதற்கிடையே பங்க் குமாரின் கிராதகச் செயல்கள் குறித்து கதை கதையாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Punk Kumars House


கொலை, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி என நூற்றுக்கணக்கான குற்றச் செயல்களில் குமார் ஈடுபட்டுள்ளான்.ஆனால் கற்பழிப்பு, குறிப்பாக திருமணமான பெண்களை கற்பழிப்பதில் மிகவும் கொடூரமாக நடந்துகொள்வானாம் பங்க் குமார்.

சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதிகளில் குமாரால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கைஎக்கச்சக்ககமாம். திருணமான பெண்கள்தான் அவனுக்குப் பிடித்தமானவர்களாம். கண்ணில் பட்ட பெண்களைகுறி வைத்து விடும் குமார் அவர்களது வீடுகளுக்கே போய் கற்பழிப்பானாம்.

தாலியை கழற்றி விட்டு பிறகுதான் கற்பழிப்பானாம் இந்தக் கொடூரன். இவனால் பாதிக்கப்பட்டவர்கள்உயிருக்குப் பயந்து வெளியில் சொல்லாமல் விட்டு விடுவராம். மீறிச்சொல்ல முயன்றால் உயிருக்கு உத்தரவாதம்கிடையாதாம்.

பங்க் குமார் மீது ஏராளமான புகார்கள் வந்தபோதும் இதுவரை 32 வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் எதிலுமே அவன் தண்டிக்கப்படவில்லை. 7 முறை குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதோடுசரியாம்.

இதற்குக் காரணம் காவல்துறையினரை தனது பையில் போட்டுக் கொண்டதுதான். சென்னை நகர காவல்துறையில்முக்கியப் பதவிகள் வகித்த பலருடன் குமாருக்கு நெருங்கிய தொடர்பு உண்டாம். என்ன குற்றம் செய்தாலும்அதற்குரிய விலையை அதிகாரிகளுக்குக் கொடுத்து விடுவானாம். இதனால் வழக்குப் பதிவு செய்வதோடு விட்டுவிடுவார்களாம் காக்கிச் சட்டை நண்பர்கள்.

காவல்துறையின் முழு ஒத்துழைப்போடுதான் பங்க் குமார் அட்டகாசம் செய்து வந்துள்ளான். சமீபத்தில்பள்ளிக்கரணை பகுதியில் ஒரு கொலை நடந்தது. இதை செய்தது குமார்தான். ஆனால் அவனை விட்டு விட்டுகூட்டாளிகள் மீது பெயருக்கு ஒரு வழக்கைப் பதிவு செய்தது போலீஸ்.

கட்டப் பஞ்சாயத்து மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளான் குமார். இவனுக்கு சென்னை மற்றும்சுற்றுப்புறங்களில் பினாமி பெயர்களில் எக்கச்சக்க சொத்துக்கள் உள்ளதாம்.

போலீஸாரால் வளர்த்து விடப்பட்டு, பின்னர் பாமகவின் நிழலில் ஒதுங்கிய குமாருக்கு இப்போது அதேபோலீஸாரால் முடிவு கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+