முடங்கின வங்கி பணிகள்-ஆட்டோக்கள் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்தி வரும் ஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தத்தால் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன.பல மாநிலங்களில் பேருந்து, வாகனப் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை

விலைவாசியை கட்டுப்படுத்தாதது, வங்கிகளில் தனியார்மயத்தை புகுத்துவது, வங்கிச் சேவைகளில் அவுட்சோர்சிங்கை நுழைப்பது உள்ளிட்ட மத்திய அரசின் போக்கைக் கண்டித்து இன்று ஒரு நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை வங்கித் துறை மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறுசங்கங்களும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தத்தால், ரயில்வே, துறைமுகப் பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 56 நிறுவனங்கள் மற்றும் இடது சாரி தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்குஅழைப்பு விடுத்துள்ளன.

கம்யூனிஸ்ட் ஆட்சியில உள்ள மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. இருமாநிலங்களிலும் ரயில், விமானம் மற்றும் பேருந்துப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

ஆட்டோக்களும் ஓடவில்லை. மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா வெறிச்சோடிக் காணப்படுகிறது.மக்கள் நடமாட்டமும் அதிகம் இல்லை. கொல்கத்தாவில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் பயணிகள்கடும் பாதிப்பை சந்தித்தனர்.

இந்தியன், ஜெட், கிங் பிஷர் உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கவில்லை. இதனால்,நேதாஜி சுபாஷ் விமான நிலையம் முடங்கிப் போயுள்ளது. இதேபோல டாக்சிகள், பேருந்து, ரயில், டிராம்போக்குவரத்தும் முடங்கிப் போயுள்ளது.

கேரளாவிலிருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துப் போக்குவரத்து நடைபெறவில்லை. அதேபோலதமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள், கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டஎல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் கடுமையாகபாதிக்ப்பட்டுள்ளனர்.

வட மாநிலங்களில் பேருந்துப் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படவில்லை. அதேசமயம், குறைந்த அளவில்பேருந்துகள் ஓடிக் கொண்டுள்ளன. கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் ஆட்டோக்கள்இயக்கப்படவில்லை.

தமிழகத்திலும் வேலைநிறுத்தம் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள்முழுமையாக பணிக்கு வரவில்லை. அதேசமயம், பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து கொஞ்சமும்பாதிக்கப்படவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னையில் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை நகரில் 25 இடங்களில் மறியல் போராட்டமும் நடந்தது. இங்குள்ள மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு வங்கி ஊழியர்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதவிரதமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.

அரக்கோணம், ஜோலார்பேட்டை, காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் மறியல்போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 30 லட்சம் நெசவாளர்களும் பங்கேற்றுள்ளதாக தமிழ்நாடு கைத்தறிநெசவுத் தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் 3 லட்சம் நெசவாளர்களும், திண்டுக்கல்லில் 60,000 பேரும், சின்னாளப்பட்டியில் 10,000 பேரும்,பரமக்குடியில் 40,000 பேரும், வரதராஜபெருமாள் காலனி, எமனேசுவரம், சோமநதாபுரம், ஜீவா நகர் ஆகியபகுதிகளில் 40,000 பேரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு, சென்னிமலை, பவானி, ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சம் பேரும்வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருப்பதாக அவர் கூறினார்.

பரமக்குடியில் தபால் அலுவலகம் முன்பு நெசவுத் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.அவர்களுடன் தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனர்.

சென்னையில் 3500 பேர் கைது:

இதற்கிடையில் சென்னையில் 25 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க அமைப்பை சேர்ந்தவர்கள்பெண்கள் உள்பட 3500 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொலைத் தொடர்புதுறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 1700பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர் மற்றும் திருவண்ணமாலை மாவட்டங்களில்தொலைத்தொடர்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் திருவண்ணாமலை, கடலூர், விழப்புரம் ஆகியஇடங்களில் 22 கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள 235 பேராசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+