மதம் மாற வற்புறுத்தும் முஸ்லீம்கள்-சுவாமி கேஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் கிராமத்தில் உள்ள இந்துக்களை முஸ்லீம்களாக மாறுமாறு மேல்விஷாரம்கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் கட்டாயப்படுத்துவதாகவும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வேலூர் மாவட்டத்தில் மேல் விஷாரம், கீழ் விஷாரம் என இரு ஊர்கள் உள்ளன. இதில் மேல் விஷாரத்தில்முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கீழ் விஷசாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டஇந்துக்கள் அதிக அளவில் உள்ளனர்.

கீழ் விஷாரத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. இவற்றை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள்நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை கவனிக்ப்படவில்லை.

மேலும், மேல்விஷாரத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு நீர், கீழ்விஷாரத்தில் உள்ள வயல்களுக்குத்தான் வந்து சேருகின்றன. இதனால் கீழ்விஷாரத்தில் உள்ள விளை நிலங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இரு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே பஞ்சாயத்துதான் உள்ளது. அந்த பஞ்சாயத்து அலுவலகமும் மேல்விசாரத்தில்தான் உள்ளது. மேல்விஷாரத்தில் உள்ள ஜமாத் சுட்டிக் காட்டும் நபரே பஞ்சாயத்துத் தலைவராகமுடிகிறது. கீழ்விஷாரத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்என்றால், அவர்கள் முஸ்லீம்களாக மாற வேண்டும் என மேல்விஷாரத்தில் உள்ளவர்கள்கட்டாயப்படுத்துகின்றனர்.

எனவே கீழ்விஷாரத்தை மேல்விஷாரம் பஞ்சாயத்திலிருந்து பிரித்து தனி ஊராட்சியாக மாற்ற உத்தரவிடவேண்டும் என்று அதில் சுவாமி கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சந்துரு ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், புதியகிராமப் பஞ்சாயத்தை உருவாக்கும் அதிகாரம் சட்டசபைக்குத்தான் உள்ளது. நீதிமன்றம் அதில் தலையிடமுடியாது என்று கூறி சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

பின்னர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+