அடுத்த ஆண்டே ஆட்சி மாற்றம் ஏற்படும்-வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:அடுத்த ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளை கண்டித்து புரசைவாக்கம் தானா தெருவில்நடந்த மதிமுக கண்டன பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் தேர்தல் முறையாக நடந்தால் 155 வார்டுகளில் 130வார்டுகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி இருக்கும். மேயர் பதவியை அதிமுககைப்பற்றும் என்று பயந்து தான் கூட்டணிக் கட்சிகளைக் கூட ஆலோசிக்காமல்மறைமுக தேர்தல் முறையை அறிவித்தார் கருணாநிதி.

எல்லாம் முடிந்த பிறகு மறைமுக தேர்தல் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்என அதே கருணாநிதி கூறுகிறார்.

பீகாரில் தேர்தல் வன்முறை நடப்பதுண்டு. அங்கு பாடலிபுத்திரம், பாட்னா போன்றஇடங்களில் கூட இதுபோல் வன்முறை நடந்ததில்லை. மாறாக சில கிராமங்களில்வன்முறை வெடிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால், தமிழகத்தின் தலைநகரில் நடந்த தேர்தல் வன்முறையை போல இந்தியாவில்எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. மக்களின் வாக்குரிமையை பறிப்பது குற்றங்களில்எல்லாம் பெரிய குற்றம்.

சட்டசபையில் முல்லை பெரியாறு அணை குறித்து பேச அனுமதி கேட்டால்பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பேச முடியாதுஎன்கின்றனர். காவிரி நீர் பிரச்னை வழக்கு கூட கோர்ட்டில் தான் இருக்கிறது. ஆனால்,இதுகுறித்து பலமுறை பார்லிமென்ட்டில் விவாதம் நடந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில்சிறந்த பார்லிமென்ட்வாதிகளுக்கு சிலை வைக்க வேண்டும்என்றால் 400 பேருக்கு மேல் சிலை வைக்க வேண்டும். ஆனால், மாறனுக்கு மட்டும்வைத்துள்ளார்கள்.

இப்போது நாட்டில் நிலவுவது இருள் சூழ்ந்த காலம். விரைவில் வசந்த காலம் வரும்.அடுத்த ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் வரும். அப்போது, அதிமுககூட்டணி வெற்றி பெறும் என்றார்.

இக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ., சேகர்பாபு,அதிமுக தேர்தல் பணிக்குழு துணைச் செயலர் பாலகங்கா ஆகியோரும் பேசினர்.

முன்னதாக சென்னையில் மதிமுக வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் தமிழ் ஈழம் என்றதலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் வைகோ பேசுகையில்,

தமிழ் ஈழம் வேண்டும் என்று நான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். 1995ம்ஆண்டு நடந்த மதிமுக மாநாட்டில், தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இந்தக் கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.

தமிழ் ஈழத்தை இந்தியாவும், உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தமிழ் ஈழத்தைஅடைவதற்காகப் போராடும் விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

இலங்கைப் படைகளுக்கு இந்தியா எந்த உதவியையும் செய்யக் கூடாது. நாக்பூரில்இருந்து இலங்கை கடற்படைக்கு தமிழகத்தின் வழியாக ஆயுதங்களை அனுப்பிவைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஆயுதம் தாங்கிய போராட்டத்தை எப்படி ஆதரிப்பது என்று கேட்கிறார்கள். ஆயுதம்தாங்காமல் எந்தப் போராட்டம் வென்றுள்ளது.? பல நாடுகள் ஆயுதப் போராட்டத்தின்விளைவாகத்தான் தங்களது நாட்டில் சுதந்திரக் கொடியை பறக்க விட்டுள்ளன.

ஒரு நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அந்த நாட்டுமக்கள்தான். அமெரிக்கா அல்ல. தனி ஈழம் கொடுத்தால் தமிழ்நாட்டில் தனி நாடுகேட்பார்கள் என்று விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் ஒருபோதும் தனிநாடு கேட்க மாட்டோம்.

தனி ஈழம் மலர்ந்து மிளிர வேண்டும். இதுதான் எங்களது ஆசை, கோரிக்கை. கடந்தசெப்டம்பர் 9ம் தேதி இலங்கைத் தமிழ் எம்.பிக்கள் பிரதமரை சந்திக்க அனுமதிகேட்டனர். அவரும் கொடுத்தார். ஆனால் அவர்களை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழ் எம்.பிக்கள் மனம் உடைந்து திரும்பி விட்டனர்என்றார் வைகோ.

இந்த கருத்தரங்கில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம், கவிஞர் காசி அனந்தன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+