அணு சக்தி ஒப்பந்தம் ஆபத்தானது: ஜெ.
சென்னை:இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மூலம் நாட்டை அமெரிக்காவிடம் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசு அடகு வைத்து விட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தில்விவாதிக்க வகை செய்யும் விதத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.இல்லாவிட்டால், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் போன்ற நாட்டின்நலனைப் பாதிக்கும் வகையிலான ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக்கொண்டிருக்கும்.
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து அணுவிஞ்ஞானிகள், அனைத்து எதிர்க்கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்டவைதொடர்ந்து தெரிவித்து வந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல், அமெரிக்காவுடன்ஒப்பந்தம் போடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
அணு சக்தி தொடர்பான விவகாரங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம் என அணு விஞ்ஞானிகள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் கூடஅதை புறக்கணித்து விட்டு இந்த ஒப்பந்த்ததை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் இல்லை. ஒப்பந்தம் அமலுக்குவரும் அடுத்த நிமிடத்திலிருந்து இந்தியாவின் அணு உலைகள், ஆய்வுத் தகவல்கள்,அணு சக்தித் திட்டங்கள் குறித்த விவரங்கள், அணு சக்தி உற்பத்தி உள்ளிட்டவைகுறித்த தகவல்களை அமெரிக்காவுக்குத் தெரிவித்தாக வேண்டும்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு நம்மை நாமே அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததுபோலாகி விட்டது.
எதிர்காலத்தில் நமக்குத் தேவைப்படும் அணு சக்தி தொடர்பான கச்சாப்பொருட்களைப் பெற இப்போதே ஒப்பந்தம் போடுவது என்பது அர்த்தமற்றது.நம்மிடம் இப்போதே தேவையான அளவுக்கு கன நீர், யுரேனியம் போன்றவைஇருப்பு உள்ளது. அதை நாம் அதிக அளவில் பயன்படுத்தினாலும் கூட, இன்னும் 100ஆண்டுகளுக்கு அது வரும்.
இந்திய விஞ்ஞானிகள் யுரேனியம் சார்ந்த அணு உலைகள் என்ற நிலையிலிருந்து,அடுத்த கட்டமாக தோரியத்தை அடிப்படையாக்க கொண்ட தொழில்நுட்பத்துக்குஅவர்கள் மாறியுள்ளனர்.
மேலும் அணு உலைகளில் மின் உற்பத்தியின்போது ஏற்படும் அதிகபட்சவெப்பத்தைத் தாங்கும் சக்தி படைத்த உலைகளை உருவாக்க உதவும், பிளாஸ்மாஆய்வுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய ஒப்பந்தம் மூலம், அமெரிக்கா, அமெரிக்க ராணுவம் மற்றும் அந்நாட்டுவிஞ்ஞானிகளிடம் சொல்லாமல், அணு சக்தி தொடர்பான எந்த்த திட்டத்தையும்சுலபமாக நிறைவேற்ற முடியாது. சுயமாக எதையும் செய்யவும் முடியாது.
இந்தியா உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த நாகரீகத்தைக் கொண்ட நாடு.மாபெரும் நாடு. பெருமைக்கு>ய நாடு. இப்படிப்பட்ட நமது நாட்டின் மரியாதையை,கெளவரத்தை குலைக்கும் வகையில், வெளிநாடு ஒன்றிடம் ஒப்பந்தம் செய்துள்ளதுவேதனை அளிக்கிறது. இப்படிப்பட்ட மக்கள் விரோத, தேச விரோத அரசை மக்கள்விரைவில் தூக்கி எறிவார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications