அப்துல் கலாம் கொடுத்த நூதன தண்டனை
கொச்சி:தனக்காக ஹெலிபேட் அமைக்க, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டியது குறித்துஅறிந்து வேதனையடைந்த, ஜனாதிபதி தலைவர் அப்துல் கலாம், அதற்குத் தண்டனையாக வெட்டப்பட்டமரங்களைப் போல ஐந்து மடங்கு மரக் கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வரும் 19ம் தேதி அப்துல் கலாம் கொச்சி வருகிறார். இதையொட்டி அங்கு அவரது ஹெலிகாப்டர் வந்துஇறங்குவதற்கு வசதியாக மெரைன் டிரைவ் பகுதியில் ஹெலிபேட் அமைக்கும் பணி நடந்தது.
ஹெலிபேட் அமைப்பதற்காக நன்கு வளர்ந்த ஐந்து மரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெட்டித் தள்ளி விட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குடியரசுத் தலைவருக்கு இமெயில்மூலமும், தந்தி மூலம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகார்களைப் பார்த்து வேதனையடைந்த கலாம், மரங்களை வெட்டியவர்களுக்கு நூதன தண்டனைகொடுத்துள்ளார். யார் மரத்தை வெட்டியவர்களோ, அவர்கள் நான் கொச்சிக்கு வருவதற்கு முன்பு, வெட்டப்பட்டமரங்களைப் போல ஐந்து மடங்கு மரக் கன்றுகளை அதே இடத்தில் நட்டு வைக்க வேண்டும்.
தனது உத்தரவு சரியாக பின்பற்றப்பட்டதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.எம். முகம்மது ஹனீஷ்கவனித்து தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் கலாம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று மரங்கள் வெட்டப்பட்ட பகுதியில் 30 மரக் கன்றுகளை நட மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
கலாம் குழந்தைகளை மட்டுமல்ல, மரங்களையும் நேசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மாளிகையில்மொகல் கார்டன் பகுதியில் மாபெரும் மூலிகைத் தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கலாம். தன்னைக் காணமாளிகைக்கு வரும் மாணவ, மாணவர்களை இந்தத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று மூலிகைகளின்பலன்களை விவரிக்க கலாம் தயங்குவதில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications