குமரி கடலில் சீற்றம்: 140 பயணிகள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:கன்னியாகுமரி கடலில் நேற்று திடீர் சீற்றம் ஏற்பட்டது. இதனால் விவேகானந்தர்பாறைக்குச் சென்று சிக்கிக் கொண்ட 140 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாகமீட்கப்பட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பிறகு குமரிக் கடலில்அடிக்கடி சீற்றம் ஏற்படுவதும், கடல் உள்வாங்குவதும் நடந்து வருகிறது. கடந்த 10நாட்களுக்கு முன்பு கடல் சீற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் திடீரென கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. காலை 8மணிக்கு வழக்கம் போல திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும்படகுப் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் கடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பு உருவானது. இதனால்விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள்திரும்பி வர இயலவில்லை. பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர்.

பெரும் அலைகளுடன் கடல் ஆர்ப்பரித்ததால் படகுகளை இயக்க முடியவில்லை.கிட்டத்தட்ட 140 பயணிகள் கரை திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்துபயணிகளை மீட்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளைசெய்தது.

அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுகரைக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். பிற்பகல் 1 மணிக்கு மேல் கடலில் இயல்பு நிலை திரும்பியதால் மீண்டும்படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+