திருச்சியில் இன்று பெரியார் சிலை திறப்பு
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று பெரியார் சிலை திறப்பு விழா நடைபெறுவதையொட்டி திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் அருகே திராவிடர் கழகம் சார்பில்பெரியார் சிலை மைக்கப்பட்டது. இந்த சிலை கடந்த 9ம் தேதி நடப்பதாக இருந்தது.
ஆனால் அதற்கு முதல் நாள் சிலையின் தலையை சில விஷமிகள் தகர்த்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்புஏற்பட்டது. பெரியார் சிலை தகர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல்நடந்தது.
இந்த நிலையில் அதே இடத்தில் உட்கார்ந்த நிலையில் பெரியாரின் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதிறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்நிகழ்ச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி சிலையை திறந்து வைக்கிறார்.
பெரியார் சிலை தொடர்பாக பெரும் சர்ச்சை நிலவி வருவதாலும், இந்து மக்கள் கட்சி, பாஜக, இந்து முன்னணிஆகியவை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதாலும், சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரில் நேற்று முன் தினம் இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர்சங்கர் ஜீவால் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. விடுதிகளில்சோதனையும் போடப்பட்டது. தங்கியிருப்பவர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன. நகர எல்லைகளில்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சிலைகளுக்கு பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. இந்துக் கோவில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications