ஐநா.: பொறுப்பேற்றார் பான் கி மூன்
நியூயார்க்:ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக தென் கொரியாவின் பாங் கி மூன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
![]() |
கடந்த பத்து ஆண்டுகளாக ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த கோபிஅன்னான் வருகிற 31ம்தேதியுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க கடந்தஅக்டோபரில் தேர்தல் நடந்தது.
இதில் தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பாங் கி மூன் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்துநேற்று மூன் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
![]() |
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபையில், பொதுக்குழுத் தலைவர் அல் கலீபா, மூனுக்குப் பதவிப்பிரமாணம்செய்து வைத்தார். பின்னர் மூன் பேசுகையில், ஐ.நா. மீதான நம்பகத் தன்மையை மீண்டும் ஏற்படுத்த தீவிரமாகபாடுபடுவேன். அதுவே எனது தலையாய பணியாக இருக்கும்.
பாதுகாப்பு, வளர்ச்சி, மனித உரிமைகளை வலுப்படுத்த பாடுபடுவேன். இதன் மூலம் அமைதியான,பாதுகாப்பான உலகை நமது சந்ததிகளுக்குத் தர முடியும். இதற்கு அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும்என்றார் மூன்.
பின்னர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கோபி அன்னானுக்கு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்துநின்று கைதட்டி பாராட்டு தெ>வித்தனர். உலக சமதானத்திற்காக அன்னான் வெகுவாக பாடுபட்டதைப் பாராட்டிதீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
பாங் கி மூன் ஜனவரி 1ம் தேதி முதல் தனது புதிய பணியைத் தொடங்குகிறார். 35 ஆண்டுகளுக்குப் பின்னர்ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்














Click it and Unblock the Notifications