ஊழல் புகார்: டால்மியாவுக்கு ஆயுட்கால தடை

Subscribe to Oneindia Tamil

Jagmohan Dalmiyaஜெய்ப்பூர்:இந்திய கிரிக்கெட் வாரிய நிதியை மோசடி செய்தது தொடர்பான புகாரையடுத்துமுன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம்ஆயுட்காலத் தடை விதித்துள்ளது.

1996ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம், உலகக் கோப்பைக் கிரிக்கெட்போட்டியை ஏற்று நடத்தியபோது டால்மியாதான் வாரியத் தலைவராக இருந்தார்.அப்போது பெருமளவில் அவர் நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க ஜெய்ப்பூரில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில் டால்மியாவுக்கு ஆயுட்கால விதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கிரிக்கெட் வாரிய பொருளாளர் சீனிவாசன் கொண்டுவந்தார். அதை பஞ்சாப் கிரிக்கெட் வாரிய தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா வழிமொழிந்தார்.

இந்தத் தீர்மானத்தை 29 பேர் ஆதரித்தனர். 2 பேர் எதிர்த்தனர். இதையடுத்துடால்மியாவுக்கு ஆயுள் கால தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேறியதாகஅறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இனிமேல் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எந்தப் பதவிக்கும்டால்மியாவால் வர முடியாது. அதேபோல, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திலும்அவர் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது.

இந்தத் தடை குறித்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் சஷாங்க் மனோகர்கூறுகையில், இந்தத் தடையை எதிர்த்து 3 வருடங்களுக்குப் பிறகே டால்மியாவால்அப்பீல் செய்ய முடியும். அப்போதும் கூட பொதுக்குழுவில் 3ல் இரு மடங்குபெரும்பான்மை கிடைத்தால்தான் தடையை விலக்க முடியும்.

உலகக் கோப்பைக்கான நிதியில் ரூ. 42 கோடி அளவுக்கு டால்மியா மோசடிசெய்துள்ளார். இது மிகப் பெரிய முறைகேடு ஆகும். போலியான ஆவணங்களைக்கொண்டு இந்த மோசடியை டால்மியா செய்துள்ளார்.

எனவேதான் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இனிமேல்அவரால் தேசிய அளவிலோ அல்லது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திலோ எந்தப்பொறுப்பையும் வகிக்க முடியாது.

இந்த முடிவை மீறி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் செயல்பட முனைந்தால்அச்சங்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மனோகர்.

முன்னதாக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட டால்மியா 42பக்கங்கள் கொண்ட விளக்கத்தை அளித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வாரிய நிர்வாகிகள் தேர்தலில் டால்மியாவின்ஆதரவாளரான ரன்பீர் சிங் மகேந்திராவை, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார்தோற்கடித்து கிரிக்கெட் வாரியத் தலைவரானார்.

அதன் பின்னர் டால்மியாவின் ஊழல் புகார் தோண்டி எடுக்கப்பட்டது. இதுகுறித்துவிளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸும் அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+