நீதிபதிகள் சஸ்பெண்ட்: விசாரிக்க இருவர் குழு
சென்னை:காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தியதற்காக நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதிமற்றும் நீதித்துறை நடுவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில்உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்க 2 நீதிபதிகள் கொண்டகுழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.
நெல்லை மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இருந்தவர் நாகநாதன். மாவட்ட 4வதுநீதித்துறை நடுவராக இருந்தவர் நாகராஜன். கடந்த 8ம் தேதி நள்ளிரவில் இருவரும்மாவட்ட அரசு மருத்துவமனை, பாளையங்கோட்டை காவல் நிலையம் உள்ளிட்டஇடங்களுக்குச் சென்று ஆய்வு என்ற பெயரில் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் நெல்லை காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. நெல்லை வந்துவிசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை அடிப்படையில் இரு நீதிபதிகளும்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நீதிபதிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நெல்லை மாவட்ட நீதித்துறை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து நெல்லைமாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் நேற்றுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தவறான புகார்களின் அடிப்படையில் இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை வாபஸ் பெற வேண்டும் என்று கண்டனம்தெரிவித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் பழனிவேலு கூறுகையில்,இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், தணிகாச்சலம்ஆகியோரைக் கொண்ட குழுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா நியமித்துள்ளார்.
இந்தக் குழு நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த நாகநாதன்,மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய நாகராஜன் ஆகியோர் மீது கூறப்பட்ட புகார்கள்குறித்து விசாரணை செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கும்.
விசாரணைக்காக இரு நீதிபதிகளும் வருகிற 18ம் தேதி நெல்லை செல்லவுள்ளனர்.அங்கு உண்மை நிலவரத்தை அறிந்து கடந்த 8ம் தேதி நள்ளிரவிலும், 9ம் தேதிஅதிகாலையிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்றவிவரத்தை அறிவார்கள்.
அதன் பின்னர் இரு நீதிபதிகள் மீதான புகார் பின்னணி குறித்து உயர்நீதிமன்றத்தில்அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி அறிக்கையைபார்த்தவுடன் இரு நீதிபதிகளும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. அப்படி வந்ததகவல் தவறு. பல்வேறு விசாரணைகளுக்குப் பின்னர் 13ம் தேதி சஸ்பெண்ட்செய்யப்பட்டு, 14ம் தேதிதான் அதுதொடர்பான உத்தரவு இருவருக்கும்வழங்கப்பட்டது என்றார் பழனிவேலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications