நேபாள மன்னரின் செயல்பாடுகள் முடக்கம்
காத்மாண்டு:நேபாளத்தில் பொதுத் தேர்தல் முடிந்து புதிய நாடாளுமன்றம் அமலுக்கு வரும் வரைமன்னர் ஞானேந்திராவின் செயல்பாடுகளை முடக்கி வைக்க அந்நாட்டு அரசியல்கட்சிகளும், மாவோயிஸ்ட் அமைப்பும் முடிவு செய்துள்ளன. தேர்தல் முடியும் வரைநாட்டின் உயர் தலைவராக பிரதமர் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மன்னர் ஞானேந்திராவுக்கு மிகப் பெ>ய மக்கள் எழுச்சிநேபாளத்தில் ஏற்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து மக்களைத் திரட்டிபெரும் போராட்டத்தில் குதித்தன. இதன் மூலம் ஆட்சிப் பொறுப்பை விட்டு மன்னர்ஞானேந்திரா விலகினார்.
இதையடுத்து 7 அரசியல் கட்சிகளைக் கூட்டணியாகக் கொண்ட இடைக்கால அரசுஏற்படுத்தப்பட்டது. ஜி.பி. கொய்ராலா பிரதமரானார். கொய்ராலா தலைமையிலானஅரசு மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தீவிரவாதசெயல்களுக்கு முடிவு கட்டியது.
7 கட்சிக் கூட்டணி அரசும், மாவோயிஸ்ட் அமைப்பும் சேர்ந்து பேசி அடுத்த ஆண்டுஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் 238 ஆண்டுகாலம் மன்னராட்சியின் கீழ் இருந்து வரும் நேபாளத்திற்கு புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் பேசி உடன்பாடு கண்டனர்.
இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை மன்னரின் அனைத்து செயல்பாடுகளும்சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடந்து முடியும் வரைபிரதமரே நாட்டின் உயர் தலைவராக செயல்படுவார்.
தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்றம் கூடி, மன்னரை என்ன செய்வது என்பதுகுறித்து முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர்கொய்ராலாவின் வீட்டில் நேபாளத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஈஸ்வர் பொக்கேரல்கூறுகையில், நேபாளத்தின் தலைவராக பிரதமர் செயல்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டநாடாளுமன்றம் கூடும் வரை மன்னரின் அனைத்து செயல்பாடுகளும் முடக்கிவைக்கப்படுகிறது என்றார் பொக்கேரல்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 7 கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அரசியல் சட்டத்தை இறுதிசெய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த இடைக்கால அரசியல் சட்டத்தை இன்று முதல் அமல்படுத்த முதலில்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 1960ம் ஆண்டு இதே நாளில்தான் தேர்தலில்வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பி.பி.கொய்ராலா தலைமையிலான முதல் நேபாளஅரசை அப்போதைய மன்னர் மகேந்திரா (இப்போதைய மன்னரின் தந்தை) டிஸ்மிஸ்செய்தார்.
இதை கருப்பு தினமாக இன்று நேபாள அரசியல் கட்சியினர் அங்கீகரிக்கின்றனர்.எனவே இடைக்கால அரசியல் சட்டத்தை இன்று அமல்படுத்துவதுஒத்திவைக்கப்பட்டது.
கடந்த மே மாதம் நேபாள நாடாளுமன்றத்தில் மன்ன>ன் அனைத்து அதிகாரங்களையும்பறிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ராணுவத்துக்கும், நேபாள மன்னருக்கும்இடையிலான தொடர்புகளும் அறவே துண்டிக்கப்பட்டு விட்டன. அவரிடமிருந்தஅனைத்து அதிகாரங்களும் அந்த சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டதுநினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications