முதல்வரை தண்டித்த திரைத்துறை: ராமதாஸ்
சென்னை:பாராட்டு விழா என்ற பெயரில் முதல்வர் கருணாநிதியை நான்கு மணி நேரம் உட்காரவைத்து அரை குறை நடனங்களை ஆடி அவரை திரைத் துரையினர் தண்டித்துவிட்டனர். இது வேதனைக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் சார்பில் 4ம் ஆண்டு பண்ணிசைப்பெருவிழா சென்னை தி.நகர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடந்தது. இந்த விழாவிற்குபாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,சென்னையில் 100க்கும் மேற்பட்ட சபாக்கள் உள்ளன. அதில் தமிழிசைக்குமுக்கியத்துவம் தரப்படுவதில்லை.
துக்கடா என்ற பெயரில் கடைசியில், அதுவும் யாராவது கேட்டால்தான் பாடுகிறார்கள்.பண்ணிசை, ஆதி இசைக்கு, நிரந்தர அமைப்பு, சபாக்கள் ஒன்றிரண்டுதான் உள்ளன.எனவே முதல்வர் கருணாநிதியை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இதுபோன்றதமிழிசை, பண்ணிசை மன்றம் தொடர்ந்து இயங்கவும், ஆராய்ச்சி செய்யவும் நிரந்தரஇடம் தேவை. அதை மாவட்ட அளவில் உருவாக்க வேண்டும்.
இளைஞர்கள் ஆபாச, வக்கிரப் புத்தியோடு சினிமா கூச்சலுக்கு மயங்குவதுவெட்கப்படும் செய்தி. அதை மாற்ற பள்ளிகளில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவும், கேள்வி ஞானம் வளரவும் குழந்தைப் பருவத்திலிருந்தே இசையைகற்பிக்க வேண்டும்.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் 4மணி நேரம் அவரை உட்கார வைத்தனர். முதல்வர் என்ன பாவம் செய்தாரோ,தெ>யவில்லை. சீனா தானா பாட்டுப் போட்டு, மேலே கொஞ்சம் துணியோடுஆடினார்கள்.
முதல்வரும் கண்களை மூடிக் கொண்டு ரசித்தாரோ அல்லது இப்படிச் சித்திரவதைசெய்கிறார்களே என்று நினைத்தாரோ தெ>யவில்லை. தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று முதல்வர் அறிவித்ததற்கா இப்படி ஒரு தண்டனையை அவர்கள்கொடுத்திருக்கக் கூடாது.
இப்போது இங்கு வந்துள்ள கூட்டத்தை விட, சினிமா நடிகர்கள் யாரவது வருவதாகஇருந்தால் இன்னும் அதிகம் பேர் வந்திருப்பார்கள். மக்களுக்கு விரசம் இல்லாமல்இசை புரிய வேண்டும், பாட வேண்டும்.
மாவட்டந்தோறும் இசைப் பள்ளிகள், கல்லூரிகளைத் தொடங்கி அதில் தங்கிப் படிக்கவசதியும், ஊக்கத் தொகையும், பட்டமும், வேலை வாய்ப்பும் கொடுக்க வேண்டும்.அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications