சச்சின் நன்கு விளையாட காசியில் யாகம்!
வாரணாசி:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கர் மற்றும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாட அருள் புரிய வேண்டும்என்று கோரி காசியில் கிரிக்கெட் ரசிகர்கள் யாகம் வளர்த்து கடவுளை வேண்டிக்கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.ஒரு நாள் தொடரை கேவலமாக இழந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும்இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களுடன் தடுமாற்றமானநிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக டெண்டுல்கர் சிறப்பாகவிளையாட வேண்டும் என வேண்டி வாரணாசியைச் சேர்ந்த குருகுல மாணவர்கள் 5பேர் அனுமனுக்கு யாகம் வளர்த்து வேண்டிக் கொண்டனர்.
வாரணாசியைச் சேர்ந்த ஜாகிரிதி பவுண்டேஷன் என்ற நிறுவனம் இந்த யாகத்திற்குஏற்பாடு செய்திருந்தது. காசியில் உள்ள புஷ்கர் குளம் அருகே இந்த யாகம் நடந்தது.
வேத மந்திரங்கள் முழங்க நடந்த யாகத்தின்போது சச்சின் டெண்டுல்கர் இழந்த தனதுபலத்தை மீண்டும் பெற்று இந்திய அணிக்கு வெற்றித் தேடித் தர வேண்டும் எனவேண்டிக் கொள்ளப்பட்டது.
அதேபோல, டெண்டுல்கரோடு மற்ற வீரர்களுக்கும் அனுமன் அருள் பாலித்துசிறப்பாக விளையாட வைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்ளப்பட்டது.
அனுமனின் அருட்பார்வை டெண்டுல்கர் மீது நிச்சயம் படும். டெண்டுல்கர் மறுபடியும்முன்பு போலவே சிறப்பாக விளையாடி இந்தியாவின் மானத்தைக் காப்பார்.அதேபோல ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி ஆகியோரும் சிறப்பாக விளையாடஅனுமன் அருள் தருவார் என்று யாகம் செய்த ஐந்து குருகுல மாணவர்களும்தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications