ரயில் நிலையத்தில் துணிகர முகமூடிக் கொள்ளை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இரணியல் ரயில் நிலையத்திற்குள் புகுந்த முகமூடிக் கும்பல்,அங்கிருந்த அதிகாரி, பெண் ஊழியரைக் கட்டிப் போட்டு விட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இரணியல் ரயில் நிலையத்தில் இரவுப் பணியில் நிலைய அதிகாரி சையத் இப்ராகிம், துப்புறவு ஊழியர்வசந்தகுமாரி ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது நள்ளிரவு பனிரெண்டரை மணியளவில் 8 பேர் அடங்கிய முகமூடி அணிந்த கும்பல் அங்கு வந்தது.இப்ராகிமையும், வசந்தகுமாரியையும் கட்டிப் போட்ட அக்கும்பல் ரயில் நிலையத்தில் இருந்த டிக்கெட் வசூல்பணம் 10 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த அலமாரி, பீரோ, பெட்டிகளை அடித்து உடைத்தனர். பின்னர் வசந்தகுமாரி கழுத்தில் கிடந்த 3பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
சிறிது நேரம் கழித்து தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு வந்தனர்.அதிகாரியும், பெண் ஊழியரும் கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள்இருவரையும் அவிழ்த்து விட்டனர்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அதிகாரி இப்ராகிமிடம் நடந்ததுகுறித்து கேட்டறிந்தனர். கொள்ளைக் கும்பலில் இருந்தவர்கள் மலையாளம் கலந்த தமிழில் பேசியதாக இப்ராகிம்தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். நாலாபுற.ம் கொள்ளையர்களைப் பிடிக்க வலைவீசப்பட்டது. இந்த நிலையில் இரணியலிலிருந்து நாகர்கோவில் திசையில் செல்லும் தண்டவாளத்தில் ஒரு கும்பல்போய்க் கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். பார்வதிபுரம் என்ற இடத்தில் ஒரு கும்பல் போய்க் கொண்டிருந்ததுதெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் விரட்டினர். இதையடுத்து அக்கும்பல் அங்கிருந்து ஓடத்தொடங்கியது. போலீஸாரும் துரத்திச் சென்றனர்.
இதில் ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தஅணீஸ் என்பது தெரிய வந்தது. இரணியல் ரயில் நிலையத்தில் கொள்ளை அடித்ததை அணீஸ் ஒப்புக்கொண்டான்.
கொள்ளைக்கூட்டத்தில் இருந்தவர்களில் 3 பேர் திருவனந்தபுரம் களக்கூட்டம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்என்றும் மற்ற நான்கு பேரும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அணீஸ் தகவல் கொடுத்தான்.
தப்பி ஓடி விட்ட மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications