இளைஞர்களுக்கு புதிய சிந்தனை தேவை: கருணாநிதி
விழுப்புரம்:படித்த இளைஞர்களுக்கு புதிய சிந்தனை தேவை. அதை அவர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
2வது கட்ட இலவச நில விநியோகத்தை விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில்கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அடையாளமாக 20விவசாயிகளுக்கு அவர் இலவச நிலத்திற்கான பட்டாவை வழங்கினார். தமிழகம்முழுவதும் நேற்று மொத்தம் 26 ஆயிரத்து 749 விவசாயிகளுக்கு இலவச நிலம்வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், கடந்த செப்டம்பர் 17ம் தேதி நிலமற்ற ஏழைவிவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.தற்போது டிசம்பர் 17ம் தேதி இந்த இரண்டாவது கட்ட விழா நடக்கிறது.
ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டவர் பெரியார். அதனால்தான் அவரது பிறந்தநாளன்று இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இனிமேல் ஒவ்வொரு மூன்றுமாதத்திற்கு ஒருமுறையும் இந்த நில விநியோகம் நடைபெறும்.
1967ம் ஆண்டு அண்ணா தென் சென்னையில் போட்டியிட்டார். நான்சைதாப்பேட்டையில் போட்டியிட்டேன். தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நான்சென்ற நேரம் ராகு காலம். அதில் நான் வெற்றி பெற்று பொதுப்பணித்துறைஅமைச்சரானேன். பின்னர் ராகுகாலம் என்னை முதல்வர் நாற்காலியிலும் அமர்த்தியது.
காலம் பார்த்து நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் உருப்பட்டு விட்டதா? அல்லது காலம்பார்க்காமல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் உருப்படாமல் போய் விட்டதா? உங்களதுஅனுபவத்தையே கணக்குப் போட்டுப் பாருங்கள்.
அந்தக்காலத்தில் பெரியார் சொல்வார். உலகத்திலேயே மிகப் பெரிய புரோகிதர்,ஜோதிடர் வசிஷ்டர்தான். அவர் பார்த்த நாளில்தான் ராமருக்குப் பட்டாபிஷேகம்.ஆனால் அந்த ராகு காலத்தில் ராமன் பட்டாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாமல்வன வாசம் சென்றார்.
வசிஷ்டர் பார்த்த நாளிலேயே அந்த கதி என்றால் மற்றவர்கள் பார்க்கும் நாட்களின்கதி என்ன ஆகும் என்று தெரியாதா. அந்த சிந்தனை இந்த நேரத்தில் தேவைதானாஎன்று நீங்கள் யோசிக்கக் கூடும்.
படித்த இளைஞர்களுக்கு புதிய சிந்தனை தேவை. அந்த சிந்தனைதான் சமுதாயத்தைஉயர்த்தும். விழிப்புற செய்யும். வானத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில்ஈடுபடுகிறார்கள். அங்கு காணும் அதிசயங்களை படமெடுத்துக் காட்டுகிறார்கள்.அதை நாம் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.
அந்தக் காலத்தில் புராண காலத்தில் இதுபற்றிய சிந்தனை இருந்ததா? சிந்தனைச்செல்வம் பெருகி ஓடுகிற இந்தக் காலத்தில் நாம் நம்மை உணர்ந்து கொள்ளவேண்டாமா? அதனால்தான் பெரியார் இனி வரும் காலம் என்ற நூலை எழுதினார்.அதன்படிதான் இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது.
இன்று ரூ. 5 கோடி செலவில் இந்த நிலங்கள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தப்பணம் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்துச் செலவிடப்படுகிறது என்றால், உங்களதுபணம் நேர்மையாக உங்களிடமே திரும்பி வருகிறது என்று அர்த்தம்.
பிற்படுத்ப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது என்ற தடையை மீறி 50ஆண்டு காலம் மெள்ள வளர்ந்திருக்கிறோம். நாம் சிங்கத்தைப் போல சீறிவரவில்லை. புலியைப் போல பாய்ந்து வரவில்லை. மன்னிக்கவும், ஆமையைப்போல மெதுவாகத்தான் வந்துள்ளோம். மெதுவாக வந்தாலும் உறுதியாகவந்துள்ளோம். ஆமையின் ஓடு போல உறுதியாக உள்ளோம்.
இப்படித்தான் இலங்கைப் பிரச்சினையும் உள்ளது. குழந்தை குட்டிகளோடு எங்கேபோய் அடைக்கலம் ஆகலாம், எங்கே போய் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்என முட்டி முட்டி பார்த்து விட்டு கடைசியாக தமிழகத்துக்கு வந்து சேர்ந்து இதுவரை10,000 பேரை தாண்டி விட்டது அகதிகளின் எண்ணிக்கை.
இலங்கைப் பிரச்சினையில் பொறுமையைக் கையாள வேண்டியுள்ளது. அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படும்போது நமது உயிர் துடிக்கிறது. மனம் துடிக்கிறது. அங்குசுமூக நிலை நிலவ வேண்டியது அவசியம் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications