முதல் சோதனையில் இந்தியா அபார வெற்றி
ஜோஹன்னஸ்பர்க்:தென் ஆப்பிரிக்காவுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 123ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது கிரிக்கெட்டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில்நடந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை எடுத்தது. முதல்இன்னிங்ஸில் முன்னணி வீரர்கள் சரிவைச் சந்தித்தபோது கங்குலியின் அபாரஆட்டத்தால் இந்தியா 249 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.ஆனால் ஸ்ரீசந்தின் அணல் பறக்கும் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களில்சுருண்டது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிதென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து 236 ரன்களை எடுத்தது.
இதன் மூலம் 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை தென்ஆப்பிரிக்காவுக்கு இந்தியா நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸைப் போலவே 2வதுஇன்னிங்ஸிலும் ஸ்ரீசந்த் அபாரமாக பந்து வீசினார். இதனால் தென் ஆப்பிரிக்கவீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர். 3வது நாள் ஆட்ட நேர இறுதியில், தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று கும்ப்ளேவின் சுழல்பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சிக்கிக் கொண்டது. அதோடு ஜாகிர்கானின் வேகப்பந்துவீச்சும் சேர தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரன் குவிக்கத் திணறினர்.
இளம் வீரர் பிரின்ஸ் மட்டும் சரிவை சமாளித்து சிறப்பாக ஆடி 97 ரன்களை குவித்துகும்ப்ளே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷான் பொல்லாக் சிறப்பாக ஆடி 40 ரன்களைசேர்த்தார்.
இறுதியில் 278 ரன்களை எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆகிதோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரவெற்றியைப் பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையை எட்டியது.
ஸ்ரீசந்த், கும்ப்ளே, ஜாகிர்கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல்டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளைவீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசந்த் ஆட்ட நாயகனாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட நகரங்களில்ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications