அணு ஆயுதங்கள் அழிய வேண்டும்: கலாம்
பெங்களூரூ:உலகம் முழுவதும் வல்லரசு நாடுகளால் தயாரித்து, குவிக்கப்பட்டு வரும் அணு ஆயுதங்கள் அனைத்தும்குறைந்து, பயன்பாடற்றுப் போக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சுட்டூர் மடத்தை நிறுவிய ஸ்ரீ சிவராத்ரீஸ்வர பகவத்பாதருவின் 1047வது ஜெயந்தி விழாபெங்களூரூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு கலாம் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலாம் பேசுகையில், ஆச்சார்யா மகாபிரக்யான்ஜி என்னிடம் ஒருமுறை சொன்னதை இப்போதுஉங்களுக்குச் சொல்கிறேன். அவர் சொன்னதையே எனது வாழ்நாள் லட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆச்சார்யா சொன்னது இதுதான்: நமது நாடு இப்போது அணு சக்தி நாடு என்பது தெரியும். நீங்களும், உங்களதுகுழுவும் சேர்ந்து சாதித்ததை விட உங்களது லட்சியம் மிகப் பெரியது என்பதை நான் அறிவேன். இதுவரைமனிதகுலம் செய்திராத சாதனையை விட அது பெரியது.
உலகம் முழுவதும் அணு ஆயுதத் தயாரிப்பு மும்முரமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் அணுஆயுதங்களை தயாரித்துக் குவித்து வருகிறார்கள்.
அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம், இந்த ஆயுதங்கள்அனைத்தும் செயலிழந்து போகும் வழியை நீங்கள் காண வேண்டும். இந்த ஆயுதங்கள் அனைத்தும் பயனற்றுப்போக வேண்டும், முக்கியத்துவம் இல்லாது புறக்கணிக்கப்பட வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்றுஎன்னிடம் கூறினார் ஆச்சார்யா.
அவர் சொன்னதைத்தான் இப்போது எனது லட்சியமாக நான் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார் கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications