பெரியாறு: அமைச்சர்கள் பேச்சும் தோல்வி!
டெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று நடந்தஅமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துவது குறித்துஉச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும் கேரள அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.மாறாக அதை முடக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை சட்டசபையில் கொண்டு வந்துநிறைவேற்றியது.
இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து டெல்லியில் தமிழக முதல்வர் கருணாநிதியும்,கேரள முதல்வர் அச்சுதானந்தனும், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ்முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரு மாநிலஅமைச்சர்கள் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர்பிரேமச்சந்திரன் ஆகியோர் மத்திய அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில் இன்றுசந்தித்துப் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு மாநில தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டஅதிகாரிகளும் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தையில்,எந்த உடன்பாடும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம்பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தையின்போது, சட்ட நுணுக்கங்கள்,தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கேரள அரசு தனது முந்தைய நிலைப்பாட்டையே வலியுறுத்தியது. அதற்கு தமிழகஅரசின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அமைச்சர் மீண்டும் மீண்டும்வற்புறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசின் சார்பில் நான் தெரிவித்தேன்.இதனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
அடுத்த கட்டமாக மீண்டும் அமர்ந்து பேசுவதா அல்லது உச்சநீதிமன்றத்தைஅணுகுவதா என்பதை முதல்வர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்துரைமுருகன்.
அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் உடனடியாகஉச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என முதல்வர் கருணாநிதி ஏற்கனவே தெளிவாககூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications