திமுக கூட்டணியில் மாற்றம் வராது: நல்லகண்ணு
திருச்சி:தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் மாற்றம் வரும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது போலஎதுவும் நடக்காது. திமுக கூட்டணியில் மாற்றம் வராது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுஉறுப்பினர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மாற்றம்ஏற்படும், கூட்டணிகள் மாறும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இது அவரது சொந்தக் கருத்து.
என்னைப் பொருத்தவரையில் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. திமுக கூட்டணியில் மாற்றம் வராது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிக்கும்.
பெரியார் சிலை உடைப்பும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்.இத்துடன் இப்பிரச்சினை முடியட்டும். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முன்வரவேண்டும். இரு மாநில அரசுகளும் இதுதொடர்பாக சுமூகமாக பேசித் தீர்வு காண வேண்டும். கேரள அரசு இதைபெரிதுபடுத்தி சிக்கலாக்குகிறது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு நதிகளை தேசியமயமாக்குவதே சரியானதீர்வாக இருக்க முடியும்.
பொருட்களை பதுக்கி வைப்பவர்களால்தான் விலைவாசி உயருகிறது. எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். அதற்கு பொருளாதார கொள்கையில் தகுந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்நல்லகண்ணு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications