பங்க் குமார் அண்ணனிடம் திடீர் விசாரணை
சென்னை:சென்னை அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பங்க் குமாரின் அண்ணன் பாஸ்கரிடம் போலீஸார் துருவித் துருவிவிசாரணை நடத்தியுள்ளனர்.
தென் சென்னையைக் கலக்கி வந்த பங்க் குமார் சமீபத்தில் சென்னை அருகே திருநீர்மலை பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டான். தங்களைத் தாக்க வந்ததால் தற்காப்புக்காக பங்க் குமாரை சுட்டுக் கொன்றதாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சம்பவம் நடந்த அன்று காலை பெங்களூரில் வைத்து பங்க் குமாரை போலீஸார் வளைத்துப் பிடித்துவிட்டதாகவும், அன்று முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில்தான் குமார் இருந்ததாகவும், திட்டமிட்டே போலீஸார்அவனை சுட்டுக் கொன்று விட்டதாகவும் அவனது தாயாரும், மனைவியும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே பங்க் குமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டபோது அதை குமாரின் ஆட்கள் வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளதாக தற்போது திடீர் தகவல் கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்கபங்க் குமாரின் அண்ணன் பாஸ்கரை போலீஸார் இன்று அழைத்து விசாரித்தனர்.
பாஸ்கர் அதிமுகவைச் சேர்ந்தவர். அவரிடம் பங்க் குமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டபோதுஎடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஆதாரம் குறித்து போலீஸார் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த விசாரணை தொடர்பாக போலீஸார் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும்வெளியிடவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications