தமிழ் ஆட்சி மொழி: பாமக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மாநில அரசு அலுவலக நடவடிக்கைகள் 100 சதவீதம் தமிழிலேயே நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்திபாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழை 100 சதவீத ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரியும்,இதுதொடர்பாக உரிய அரசாணையைப் பிறப்பிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரத்தில் நடந்த போராட்டத்திற்கு கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார். சென்னையில்நடந்த போராட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.

போராட்டத்தின்போது அவர் பேசுகையில், 1956ம் ஆண்டே தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கடிதத் தொடர்புகள், உத்தரவுகள் உள்ளிட்டவைஇன்னும் ஆங்கிலத்திலேயே உள்ளன.

எனவே ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சட்டத்தை 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும்.

அரசு ஆணைகள், கடிதத் தொடர்புகள், உத்தரவுகள் உள்ளிட்ட அனைத்து அரசு நடவடிக்கைகளும் தமிழிலேயேஇருக்க வேண்டும் என்று கோரினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+