இந்திரா சிலை சேதம்: சேலத்தில் டென்ஷன்
சேலம்:சேலம் அம்மாப்பேட்டையில் நிறுவப்படவிருந்த இந்திரா காந்தியின் சிலை காணாமல்போனதால் அங்கு பதட்டம்ஏற்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
அம்மாப்பேட்டை மெயின் ரோடு சந்திப்பில் கடந்த 1984ம் ஆண்டு இந்திரா காந்தி சிலை நிறுவப்பட்டிருந்தது.இன்று காலை அந்த சிலையை காணவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர்சுசீந்திர குமார் தலைமையில் தொணட்ர்கள் திரண்டு வந்து சாலை மறியலில் குதித்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், மாணவ, மாணவியர், வேலைக்குப்போவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் சிலைமீண்டும் இங்கே வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என காங்கிரஸார் கூறி விட்டனர்.
இந்த நிலையில், போராட்டம் நடந்த இடத்திற்கு அருகே சேதப்படுத்தப்பட்ட இந்திரா காந்தியின் சிலையின் காதுமற்றும் வாய் பகுதியை ஒரு தொண்டர் பார்த்து அதை சுசீந்திர குமாரிடம் கொடுத்தார். இதனால் காங்கிரஸார்கொந்தளித்தனர்.
சிலையை சேதப்படுத்திய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்றப்பட்ட அதே இடத்தில்மீண்டும் சிலையை வைக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் போலீஸாரிடம்தெரிவித்தனர்.
சிலை உள்ள பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைக்கப்படவுள்ளது. இதனால் அந்த நிலத்தை அவர்கள்கையகப்படுத்தினர். அப்போது சிலையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கேபிள் வயரை எடுத்து சிலை மீதுபோட்டுள்ளனர்.
இன்று அதிகாலை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழக்கடை ராமசாமி என்பவருக்குச் சொந்தமான லாரி அந்தவழியாக வந்தபோது கேபிள் வயரில் சிக்கியது. ஆனால் அதை டிரைவர் கவனிக்காமல் லாரியை ஓட்டியதால்சிலையைச் சுற்றியிருந்த கேபிள் வயர் இழுத்து இந்திரா காந்தியின் சிமென்ட் சிலை விழுந்து சேதமடைந்தது.
அதை சரி செய்வதற்காக அதே லாரியில் சிலையை எடுத்துக் கொண்டு டிரைவர் சென்று விட்டார். தற்போது அந்தலாரி கிருஷ்ணகிரி அருகே பிடிபட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பெரியார் சிலை உடைக்கப்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டு தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இந்தநிலையில் இந்திரா காந்தியின் சிலை சேதமடைந்த விவகாரத்தால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications