பெரியாறு: நடைபயணம் தொடங்கினார் வைகோ
மதுரை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மதிமுக தொண்டர்கள் புடைசூழ அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை மதுரையிலிருந்து நடைபயணத்தைத்தொடங்கினார்.
காவிரிப் பிரச்சினையின்போது காணப்படாத எழுச்சியும், வேகமும் தற்போது முல்லைப் பெரியாறு விஷயத்தில்தமிழக விவசாயிகளிடம் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் கேரள அரசின் பிடிவாதப் போக்கைக் கண்டித்துபொருளாதாரத் தடைப் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த நடைபயணம்மேற்கொள்ளப் போவதாக வைகோ அறிவித்தார்.
அதன்படி இன்று காலை மதுரையிலிருந்து தனது பெரியாறு: நடைபயணம் தொடங்கினார் வைகோ. மதுரை வண்டியூர்மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அருகிலிருந்து காலை 10 மணிக்கு நடைபயணம் தொடங்கியது.
மதிமுக தொண்டர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பெருமளவில் திரண்டு நடைபயணத்திற்காக வந்தவைகோவை வரவேற்றனர். மாவட்ட மதிமுக தலைவர் பூமிநாதன் தலைமையில் தாரை , தப்பட்டை முழங்கவரவேர்பு கொடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வந்து வைகோவின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துதெரிவித்தார். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ தனது நடைபயணத்தைத்தொடங்கினார் வைகோ.
வெயிலையும் பொருட்படுத்தாமல் காமராஜர் சாலை, தெற்கு மாசி வீதி, மேமாசி வீதி, புது ஜெயில் சாலை,காளவாசல் வழியாக கோச்டைக்குச் சென்ற வைகோ அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு நாகமலைப்புதுக்கோட்டைக்குக் கிளம்பினார்.
இன்று இரவு செக்கானூரணியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசுகிறார். வைகோ செல்லும்வழியெங்கும் மதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
23ம் தேதி தனது நடைபயணத்தை கூடலூரில் முடிக்கும் வைகோ அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications