திமுக ஆதரவில் தலைவரான அதிமுக கவுன்சிலர்!!!
தேனி:தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரமாதேவி, திமுக கவுன்சிலர்களின்ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேனி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டது. இங்குமொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் 6 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் அதிமுகவினர்.மதிமுகவுக்கு ஒரு கவுன்சிலர் உள்ளார்.
திமுக கவுன்சிலர்களில் யாரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் இல்லை என்பதால் தலைவர் பதவிக்கான தேர்தலைநடத்த திமுக தரப்பு ஒத்துழைப்பு தராமல் தேர்தலை புறக்கணித்து வந்தது. இதனால் 3 முறை தேர்தல் நடத்தஏற்பாடு செய்தும் தேர்தலை நடத்த முடியவில்லை.
இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கவுன்சிலர் ஒருவர் தலைவராவதற்கு திமுக ஒத்துழைக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முதல்வர் கருணாநிதியை நேரில்சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதியும், தாழ்த்தப்பட்ட ஒருவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில்கட்சி பாகுபாடின்றி அதிமுகவுக்கு திமுக ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து இன்று தேர்தல் நடந்தது. அதில் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ரமாதேவி ஒருமனதாகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல 3 முறை ஒத்திவைக்கப்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலும் இன்று நடந்தது.இதில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து தாவி பாமகவில் இணைந்த வெங்கடேசன் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications