கிரிக்கெட்-இந்திய வெற்றிக்காக கபால பூஜை!!
காசி:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வெல்லவேண்டி, காசியில் ஒரு மந்திரவாதி மண்டை ஓட்டை வைத்து பூஜை செய்துள்ளார்.
பாபா சமுந்தரம் என்ற மந்திரவாதிதான் இந்த கபால பூஜையை நடத்தியவர். காசியில் உள்ள லக்ஸா என்றஇடத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவில் இந்த பூஜையை அவர் நடத்தினார்.
பூஜையை நடத்திய பாபா சமுந்தரம், பாபா கினாராம், பாபா சித்தார்த்த கெளதம் என்ற துறவிகளின் சிஷ்யராம்.தனி மனிதராக அமர்ந்து இந்த மண்டை ஓட்டு பூஜையை நடத்தியுள்ளார் சமுந்தரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய வீரர்கள்பரிதாபமாக தோல்வியைத் தழுவியதைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன்.
இந்திய அணியின் வெற்றிக்காக நான் பூஜை செய்ய முடிவு செய்தேன். சிலரைப் போல விளம்பர நோக்கில் இதைசெய்ய நான் விரும்பவில்லை. எனவேதான் தந்திர, மந்திர சக்தியைக் கொண்டு இந்திய வீரர்களுக்குள்புதைந்துள்ள திறமையை வெளிக் கொண்டு வரும் வகையியல் கபால பூஜையை நடத்த முடிவு செய்தேன்.
கடந்த நான்கு நாட்களாக இந்த கபால பூஜையை நான் செய்து வருகிறேன். இதன் மூலம் மந்திர, தந்திர சக்திகள்மூலம் இந்திய வீரர்களின் திறமையை வெளிக் கொணர மு.டியும்.
எனது மந்திர, தந்திர சக்தியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்த பூஜையின் மூலம் இந்திய வீரர்கள்புத்துணர்வு பெறுவார்கள் என்றார் சமுந்தரம்.
அவரது அறையில் இந்திய வீரர்கள் மொத்தமாக அமர்ந்திருக்கும் பிரமாண்ட போஸ்டர் உள்ளது. அதற்குக்கீழேதான் அவர் கபால பூஜையை நடத்தி வருகிறார். கீழே மூன்று மனித மண்டை ஓடுகளை சமுந்தரம்வைத்துள்ளார். அவற்றை மலர்களால் அலங்கரித்துள்ளார்.
இந்த மண்டை ஓடுகளுக்கு அர்ச்சனை செய்து, ஒயின் உள்ளிட்டவற்றை ஊற்றி அதன் பிறகு பூஜை செய்கிறாராம்சமுந்தரம். பின்னர் இந்த ஒயினை சமுந்தரம் குடித்து விடுவாராம். கேட்டால் அதுதான் பிரசாதம் என்கிறார்!
கபால பூஜையின் சிறப்பு என்ன என்று சமுந்தரத்திடம் கேட்டால், உலகில் உள்ள எல்லா செயல்களுமே மனிதமூளையால்தான் நடக்கின்றன. எனவே இந்த மண்டை ஓடுகளில் ஒயினை நிரப்பி, பழங்களால் அபிஷேகம்,பூஜை செய்யும்போது, மந்திர, தந்திர சக்தியினால் இந்திய வீரர்களின் மூளையை யோசிக்கத் தூண்ட முடியும்.எனவேதான் இந்த பூஜை என்கிறார்.
ஒயின் தரவி ஐந்து எலுமிச்சம் பழங்களையும் பிழிந்து ஒயினுடன் கலந்து, ஊதுவத்தியையும் கொளுத்திஅமர்க்களமாக பூஜை செய்கிறார் சமுந்தரம்.
இத்தோடு விடவில்லை சமுந்தரம். சுடுகாட்டுக்குப் போய், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களைப் பார்த்து நமதுவீரர்கள் பயப்படாமல் இருக்க நள்ளிரவு பூஜையையும் செய்து வருகிறாராம்.
தென் ஆப்பிரிக்க பயணத்தில் மட்டும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்காமல், அடுத்த ஆண்டு மேற்குஇந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி கோப்பையைவெல்ல வேண்டியும் இந்த கபால பூஜையை நடத்தி வருகிறாராம் சமுந்தரம்.
காலக் கொடுமைடா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications