ஐ.ஜி.ஆனார் சைலேந்திரபாபு
சென்னை:சைலேந்திரபாபு உள்ளிட்ட 6 டிஐஜிக்கள், ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் வட சென்னை இணை ஆணையராக இருந்தவர் சைலேந்திரபாபு. இவரது அதிரடிநடவடிக்கையால் வட சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் வெகுவாக குறைந்தது. ஸ்ட்ரிக்ட்டான அதிகாரியாகதிகழ்ந்த சைலேந்திர பாபு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், வட சென்னையிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.
புகளூர் காகித ஆலை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் ஐ.ஜியாக பதவிஉயர்த்தப்பட்டு அதே இடத்தில் பணியில் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு பெற்றுள்ள பிற டிஐஜிக்கள்:
நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் உமா கணபதி சாஸ்திரி, பதவி உயர்வுக்குப் பின்னர் சென்னை லஞ்சஒழிப்புப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
பயிற்சிப் பிரிவு டிஐஜி பிரதீப் பிலிப், பதவி உயர்வு பெற்று சென்னை சமூக நீதிப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடலோரப் பாதுகாப்பு புலனாய்வுப் படை டிஐஜி கரன் சின்ஹா பதவி உயர்வுக்குப் பின்னர் அதே இடத்தில்தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சரக டிஐஜி ரமேஷ் குடவாலா பதவி உயர்வு பெற்று தலைமையிட ஐஜியாக சென்னைக்குமாற்றப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பப் பிரிவு டிஐஜி விஜயக்குமார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இடமாற்றங்கள்:
சென்னை ரயில்வே டிஐஜி கருணாசாகர் திண்டுக்கல் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் சரகத்தைக்கவனித்து வந்த வன்னியபெருமாள் விழுப்புரம் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சரக டிஐஜி ராஜீவ் குமார் சென்னை தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ராமச்சந்திர மூர்த்தி மத்திய சென்னை போக்குவரத்துதுணை ஆணையராகவும், எஸ்.பி. முகம்மது அனீபா மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications