ரோம் அறிவியல் கழக உறுப்பினரான கஸ்தூரிரங்கன்
பெங்களூரூ:ரோம் நகரில் உள்ள அறிவியல் கழக (Pontifical Academy of Sciences) உறுப்பினராக, இந்திய வானியல்விஞ்ஞானியும், பெங்களூரூ தேசிய அறிவியல் கழக இயக்குநருமான டாக்டர் கே.கஸ்தூரிரங்கனைபோப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நியமித்துள்ளார்.
ரோம் நகரில் கடந்த 1603ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி அறிவியல் கழகம் உருவாக்கப்பட்டது. கணிதம்,இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் நடந்து வரும் ஆய்வுகளை ஊக்குவிக்க இந்த கழகம்நிர்மாணிக்கப்பட்டது.
இத்துறைகளில் சிறந்து விளங்கும் தலை சிறந்த விஞ்ஞானிகள் இந்த கழகத்தில் உறுப்பினராக வாடிகன் நிர்வாகம்நியமிக்கும். இன, மத பாகுபாடின்றி இந்த கழகத்தின் உறுப்பினர்களை வாடிகன் நியமித்து வருகிறது.
இதில் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் அவர்களது ஆயுள்காலம் வரை இதில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள்என்பது குறிப்பிடத்தக்கது. போப்பாண்டவர்தான் இதற்கான நியமனத்தை மேற்கொள்வார்.
உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள், இந்த ஆய்வுக் கழகத்தின் செயல்பாடுகளில் முழுமையாக தங்களைஈடுபடுத்திக் கொள்வார்கள். அத்தோடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அக்டோபர்-நவம்பரில் நடைபெறும்மாநாட்டிலும் பங்கேற்பார்கள்.
தற்போது இந்த கழகத்தில் பிரபல வானியல் விஞ்ஞானியும், இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும்,பெங்களூரூரில் உள்ள தேசிய அறிவியல் கழக இயக்குநருமான டாக்டர் கஸ்தூரிரங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை போப்பாண்டவர் பிறப்பித்துள்ளார்.
இந்த கழகத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் நான்காவது இந்தியர் கஸ்தூரி ரங்கன். இதற்கு முன்புசர்.சி.வி.ராமன், பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன், பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இதில்உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
இந்தக் கழகத்தில் 90 விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 29 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்.விரைவில் வாடிகன் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கஸ்தூரிரங்கனிடம் நியமன உத்தரவை போப்பாண்டவர்16ம் பெனடிக்ட் வழங்குவார்.
இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications