இந்து தலைவர் கொலை-தென்காசியில் பதற்றம்
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன்படுகொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.
தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்தவர் குமார் பாண்டியன். கடந்த6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இங்கு த.மு.மு.க. சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்குப் போட்டியாக அடுத்த நாள் இந்து முன்னணி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும்இந்து அமைப்புகள் இந்து எழுச்சி நாளைக் கொண்டாடினர். இதையடுத்துஅவர்களுக்கும், த.மு.மு.கவினருக்கும் இடையே மோதல் மூண்டது. போலீஸார்தலையிட்டு சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, காந்தி சிலை உள்ள இடத்தில் இரு தரப்பினரும்எந்தவித தட்டி, போர்டுகளை வைக்கக் கூடாது என போலீஸார் அறிவுறுத்தினர்.ஆனால் இரு தரப்பும் அதை ஏற்கவில்லை. இதனால் கூட்டத்தில் உடன்பாடுஏற்படாமல் மோதலில் முடிந்தது.
இந் நிலையில் குமார் பாண்டியன் மற்றும் அவரது நண்பர் சேகர் ஆகியோர் லாலாகடை முனை என்ற இடத்தில் சென்றபோது திடீரென வந்த ஒரு கும்பல் குமாரையும்,சேகரையும் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த குமாரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
சேகர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தென்காசியில்பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கடைகள் அடைக்கப்பட்டன. இந்து முன்னணிஉள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியலில் குதித்தன. இதனால் தென்காசியில் பஸ்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அப்துல்லா, ஹனீபா ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். சுலைமான் என்பவரைத் தேடி வருகின்றனர். இவர்களிடம் நடத்தியவிசாரணையில் சில முக்கியப் புள்ளிகள் கொலைச் சம்பவத்தின் பின்ணியில்இருப்பது தெரிய வந்தது.
அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். போதியஆதாரங்கள் கிடைத்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அல் உம்மா அமைப்பினருக்கு இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புஉள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று குமார் பாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் பிரமுகரைகைது செய்யக் கோரி அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. சாலை மறியலும்தொடர்ந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ், எஸ்.பிசெந்தாமரைக்கண்ன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று அமைதி காக்குமாறுகோரினர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக போலீஸாரிடம்மோதினர். கல்வீச்சு நடந்து கடைகள் சில உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார்தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.
தொடர்ந்து பதட்டம் நிலவிவருவதால் தென்காசி முழுவதும் அதிரடிப்படை, கலவரத்தடுப்புப் போலீஸார், ஆயுதப் படை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பதட்டம் நீடிப்பதால், தொடர்ந்து போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள்இயக்கப்படுகின்றன. மக்கள் மத்தியில் பீதி அகலாததால் நடமாட்டம் குறைந்துகாணப்படுகிறது.
தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில், டிஐஜி மாகாளி தலைமையில்போலீஸார் தென்காசியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துவருகின்றனர்.
உடல் தகனம்:
இந்த நிலையில் குமார் பாண்டியனின் உடல் நேற்று மாலை செங்கோட்டை சாலையில்உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. உடல் தகனத்தின்போது பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications