உண்மை பேச மறந்த எல்.ஜி.: அதிமுக தாக்கு
சென்னை:இட ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மதிமுக அவைத் தலைவர்எல்.கணேசன் சில உண்மைகளைப் பேசத் தவறி விட்டார் என அதிமுக தலைமைநிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டசமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மீதுவிவாதம் நடந்தது. அதில் பேசிய எல்.கணேசன், முதல்வர் கருணாநிதியை சரமாரியாகபுகழ்ந்து பேசினார். மேலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டசமூகத்தினரைப் புறக்கணித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கணேசனுக்குக்கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 18ம் தேதி மக்களவையில் பேசிய எல்.கணேசன், 1989ம் ஆண்டு தமிழகசட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சுட்டிக் காட்டிப் பேசுகையில், சிலஉண்மைகளை வெளியிடத் தவறி விட்டார். மேலும், இட ஒதுக்கீட்டுக்காக எம்.ஜி.ஆர்.எதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளதும் கண்டனத்துக்குரியது.
1971ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 31 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தாழ்த்தப்பட்ட மற்றும்பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாக இருந்தது. மொத்தமாக 49சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கடந்த 1980ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாகவும், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான ஒதுக்கீடு 18 சதவீதம்எனவும், மொத்தமாக 68 சதவீத இட ஒதுக்கீடாக உயர்ந்தது. இது வரலாற்று உண்மை.
1992ம் ஆண்டு இந்திரா சஹானி என்பவர் தொடர்ந்த வழக்கில் இட ஒதுக்கீடு 50சதவீதத்தைத் தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இதை மறுஆய்வு செய்து 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இசைவு தர வேண்டும் என வலியுறுத்தி,அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழக அரசின் சார்பாக, தனிஅனுமதி மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழகசட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை ஏற்றுஅரசியலமைப்புச் சட்டத்தின் 31பி, 31 சி ஆகிய பிரிவுகளில் திருத்தம் கொண்டுஅரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் அந்த திருத்தங்களை மத்திய அரசுசேர்த்து திருத்தம் செய்தது.
தமிழக சட்டசபையில் 1993ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தமிழக சட்டசபையில் 31 சிபிரிவில் திருத்தம் செய்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் தரக்கோரி குடியரசுத் தலைவருக்கு தந்தியும் அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் சட்ட மசோதாவைப் பாதுகாக்கும் வகையில், நாடாளுமன்றத்தில்76வது சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு 1994ம் ஆண்டுகுடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்தார். இதன் மூலம் இட ஒதுக்கீடு சட்டத்திற்குசட்ட அங்கீகாரம் கொடுத்தவர் ஜெயலலிதாதான்.
இதற்காக சென்னையிலிருந்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் டெல்லி சென்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வைத்தவர் ஜெயலலிதாதான். இதன் மூலம் இட ஒதுக்கீடுசட்டத்திற்குப் பாதுகாப்பு கிடைத்தது.
இதைப் பாராட்டும் வகையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஜெயலலிதாவுக்குசமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தையும் வழங்கினார். இதை நாட்டு மக்கள்நன்கு அறிவார்கள் என்று கூறியுள்ளார் செங்கோட்டையன்.
அதிமுகவின் இந்த அறிக்கை மூலம், எல்.ஜி உள்ளிட்டோர் மதிமுகவிலிருந்துதாவுவது கிட்டத்தட்ட கன்பார்ம் ஆகி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications