மாணவன் கையை அடித்து ஒடித்த வார்டன்
திருவண்ணாமலை:பரீட்சையில் பெயில் ஆனதால் 8வது வகுப்பு மாணவனை, விடுதி வார்டன் பிரம்பால் அடித்ததில் அந்தமாணவின் கை ஒடிந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரம் என்ற ஊரில் உள்ள புனித சகாய மாதா உயர் நிலைப்பள்ளியில் 8வதுவகுப்பு படித்து வருபவர் மணிமாறன். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
14 வயதாகும் மணிமாறன் சமீபத்தில் நடந்த பரீட்சையில் தோல்வியுற்றார். இதையடுத்து கோபமடைந்த விடுதிவார்டன் பிரேம்குமார் சில நாட்களுக்கு முன்பு பிரம்பால் சரமாரியாக மணிமாறனை அடித்துள்ளார்.
இதனால் வலி பொறுக்க முடியாமல் துடித்துள்ளார் மணிமாறன். உடனடியாக மணிமாறனுடன் படிக்கும் பிறமாணவர்கள், மணிமாறனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மணிமாறனின் தந்தை வேலு, தாயார் காந்தாயி ஆகியோர் சென்னையிலிருந்து விரைந்தனர்.மணிமாறனை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுவனின் கை ஒடிந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது மணிமாறனுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. மணிமாறனை விடுதி வார்டன் அடிப்பது புதிதல்ல என்றும் அடிக்கடி இவ்வாறுஅடிப்பார் என்றும் மணிமாறனின் பெற்றோர்கள் குமுறலோடு தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications