டெல்லியை தாக்க வந்த 3 தீவிரவாதிகள் கைது
டெல்லி: டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க ஊடுறுவிய பாகிஸ்தானின்லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்முஇதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே போலீஸார் வழக்கமான கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது காஷ்மீரிலிருந்து வந்த தனியார் சுற்றுலாப்பேருந்திலிருந்து இறங்கிய 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார்மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது அவர்களது பெயர்கள் முகம்மது அக்பர் ஹூசைன்என்ற ஹபீப், முகம்மது ஹசன் என்ற அப்துல் ரகுமான், சல்மான் குர்ஷித் கோரிஎன்பதும், அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும்தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 2 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், 2 டெட்டனேட்டர்கள், ஒருகை எறிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த 3 பேரும் மணிப்பூர்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். லஷ்கர் அமைப்புக்காக செயல்பட்டு வந்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டையை தகர்க்கும் நோக்கில் இவர்கள் 3 பேரும் வந்துள்ளனர்.இவர்களுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஸ்ஸாக் ஜிவான்,முகம்மது ஆலம்கீர் ஹூசைன் ஆகியோரை கடந்த அக்டோபர் 16ம் தேதியேபோலீஸார் கைது செய்துவிட்டனர்.
கோரி இம்பாலைச் சேர்ந்தவர், கடந்த 2001ம் ஆண்டு சலீம் என்பவருடன்இவருனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. வட கிழக்குப் பகுதியில் தீவிரவாதச் செயல்களில்ஈடுபட சலீம்தான் கோரியை ஊக்குவித்துள்ளார். பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கு அங்கு தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த கோரி, அப்துல் ரகுமான், முகம்மது அக்பர்ஹூசைன், சைபுல்லா ஆகியோரை தேர்வு செய்து தீவிரவாதப் பயிற்சிக்காககாஷ்மீருக்கு அனுப்பியுள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பாதுகாப்புப்படையினரின் தாக்குதலில் சைபுல்லா கொல்லப்பட்டார்.
3 தீவிரவாதிகள் பிடிபட்டதைத் தொடர்ந்து செங்கோட்டை மற்றும் டெல்லி முழுவதும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications