மதிமுக உடைகிறது: எல்ஜி-செஞ்சி போர்க்கொடி!

Subscribe to Oneindia Tamil
L.Ganeshan

டெல்லி:மக்களின் நம்பிக்கையையும் தொண்டர்களின் நம்பிக்கையையும் வைகோ இழந்துவிட்டார் என்று மதிமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் திடீரென குற்றம் சாட்டியுள்ளனர்.

இருவரும் மதிமுகவிலிருந்து விரைவில் விலகி திமுகவில் ஐக்கியமாகலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வைகோ நடை பயணத்தில் இருக்கும் நிலையில்இந்த இரு மூத்த தலைவர்களும் அவருக்கு எதிராக கொடி பிடித்துள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியிலிருந்து மதிமுகவெளியேறியபோது, அந்தக் கட்சியை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேருதவிபுரிந்தவர் அவைத் தலைவரான எல்.கணேசன் தான். சசிகலாவின் உறவினரான எல்.ஜிமூலம் தான் வைகோவை இழுத்து அதிமுக கூட்டணியில் இணைத்தார் ஜெயலலிதா.

எந்தக் கட்சியால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம்சிறைவாசம் அனுபவித்தாரோ, அந்தக் கட்சிக்காக சூறாவளிப் பிரசாரம் செய்தார்வைகோ. அரசியல் நோக்கர்களிடையே வைகோவின் இந்த அணி மாற்றம் பெரும்சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதிலும், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பேசினார்வைகோ.

வைகோவின் விலகலால் அதிமுக அணிக்கு பெரிய அளவில் பலன்கிடைக்காவிட்டாலும் கூட திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல்போனதற்கு தங்களது விலகலே காரணம் என கூறி வந்தது மதிமுக.

இந் நிலையில் மதிமுகவில் தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டு கட்சி உடையக் கூடியஅபாயம் எழுந்துள்ளது. அவைத் தலைவர் எல்.கணேசன் மற்றும் முன்னாள் மத்தியஅமைச்சரும், எம்.பியுமான செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வைகோவைகடுமையாக விமர்சித்துப் பேட்டி கொடுத்துள்ளனர்.

தற்போது டெல்லி சென்றுள்ள எல்.கணேசன் அங்கு தனியார் தொலைக்காட்சிஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அடிக்கடி அரசியலில் அணி மாறுவது என்பதுநம்பகத் தன்மையை பாதித்து விடக் கூடிய செயலாகும். இப்போது வைகோவும்நம்பகத் தன்மையை இழந்து விட்டார்.

நான் இப்படிச் சொல்வதால் அணி மாறப் போகிறேன் என்று அர்த்தம் இல்லை.இப்போது வரை நான் மதிமுகவில்தான் இருக்கிறேன். ஆனால் நாளை நடக்கப்போவதை யார் அறிவார் என்று சூசகமாக பேசியுள்ளார். மதிமுகவில்தான்இருக்கிறேன், அணி மாறவில்லை என்று எல்.ஜி. கூறினாலும் அவர் அணி மாற முடிவுசெய்து விட்டார் என்றே பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் எல்.ஜி. சந்தித்துப் பேசினார். தனதுஅணி மாற்றம் குறித்து அவர் விவாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால்பிரதமர் நிவாரண உதவி தொடர்பாக சில மனுக்களை அளிக்க வந்ததாகவே எல்.ஜி.கூறியுள்ளார்.

எல்.ஜி. அணி மாறப் போகிறார், திமுகவில் சேரப் போகிறார் என்ற எதிர்பார்ப்புஅதிகரிக்க இன்னொரு முக்கிய காரணம், மக்களவையில் 27 சதவீத இட ஒதுக்கீடுமசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எல்.ஜி.பேசுகையில், முதல்வர்கருணாநிதியை சகட்டுமேனிக்குப் புகழ்ந்து பேசினார்.

மத்திய அரசுக்கு மறைமுகமாக பல வகையிலும் நெருக்கடி தந்து இட ஒதுக்கீட்டைஅமலாக்கச் செய்தவர் கருணாநிதி தான் என்றும் அவர் கூறினார். வெளியில்தெரியாமல் காய் நகர்த்தி இட ஒதுக்கீட்டை கிடைக்கச் செய்த கருணாநிதியை பிற்பட்டமக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.

எல்.ஜி மக்களவையில் பேசிய பேச்சின் முழு உரையும் திமுகவின் நாளிதழானமுரசொலியில் அப்படியே இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் எல்.ஜி. திமுகவுக்குத்தாவத் தயாராகி விட்டார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்.ஜி.பேட்டி கொடுத்த சில நிமிடங்களிலேயே முன்னாள் அமைச்சரான செஞ்சிராமச்சந்திரனும் வைகோவை விமர்சித்துப் பேட்டி கொடுத்துள்ளார். அவர்கூறுகையில், நான் இந்த நிமிடம் வரை மதிமுகவில்தான் இருக்கிறேன். நான் மதிமுகவைவிட்டு விலகப் போவதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானது. ஆனால் எதிர்காலத்தில்என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

எல்.ஜி.யாரின் கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. வைகோவுக்கு எதிரானஎங்களது விமர்சனம் ஆக்கப்பூர்வமான ஒன்றுதான். எல்.ஜியாரை கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஸ்ரீரங்கம் பெரியார் சிலை ஆகிய பிரச்சினைகளில்அதிமுகவின் கொள்கையிலிருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன். அதிமுக

தலைவரின் கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முடிவெடுக்க வேண்டியது இலங்கைத்தமிழர்கள்தான். ஒரு நாடு இணைவதும், பிரிவதும் சாதாரணமான விஷயம். தனி நாடுகேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை இலங்கைத் தமிழர்களுக்கும்உள்ளது.

அதேபோல பெரியாரை நாத்திகவாதி என்று பார்ப்பதை விட சீர்திருத்தவாதிஎன்றுதான் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோவில் முன்புசிலை வைக்க முடிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை. இதை எதிர்ப்பதை ஏற்கமுடியாது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் கருத்து எனக்கு உடன்பாடானதுஅல்ல.

என் மகள் திருமணம் வைகோ தலைமையில் தான் நடக்கும். அதற்கு எல்லா தலைவர்களையும் அழைப்பேன்என்றார் செஞ்சியார். முதல்வர் கருணாநிதியையும் அவர் திருமணத்துக்கு அழைக்கவுள்ளதாக அவருக்குநெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதுரையில் வைகோ தனதுநடைப்பயணத்தை மேற்கொண்டபோது எல்.ஜி.யும், செஞ்சியாரும் வரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே இவர்கள் இருவரும் அணி மாற முடிவு செய்துவிட்டார்கள் என்ற பேச்சு எழுந்து விட்டது.

தற்போது இருவரும் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தாவல்உறுதியாகி விட்டதாக கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தில் தற்போது மதிமுகவுக்குநான்கு எம்.பிக்கள் உள்ளனர். எல்.ஜி, செஞ்சியார் தவிர பொள்ளாச்சி கிருஷ்ணன்,சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர். இந்த இருவரும் வைகோவின் தீவிரவிசுவாசிகள் என கருதப்படுவதால் அவர்கள் வெளியேறும் வாய்ப்பு இல்லை.

இதேபோல சட்டசபை மதிமுக கட்சியிலும் பிளவு ஏற்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை மதிமுக தலைவர் கண்ணப்பனுக்கும்,வைகோவுக்கும் இடையே சமீப காலமாக பூசல் அதிகரித்து வருகிறது. வைகோ மீதுகடும் அதிருப்தியில் கண்ணப்பன் உள்ளார்.

எனவே கண்ணப்பன் தலைமையில் ஓரிரு எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் சாயக் கூடும்என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எல்.ஜி. விவகாரம் குறித்து கண்ணப்பன் கூறுகையில், இது குறித்து நான் கருத்து சொல்லவிரும்பவில்லை. வைகோவிடம் ஆலோசித்த பிறகுதான் எதுவும் கூற முடியும். இதுவரை எம்பிக்கள் யாரும்விலகவில்லை. எம்எல்ஏக்கள் யாரும் எங்கும் போக மாட்டார்கள். இதுகுறித்து பேச இன்று இரவு வைகோவைசந்திக்க செல்கிறேன். நாளை முதல் அவருடன் நடைபயணத்தில் கலந்து கொள்கிறேன்.

மதிமுக எந்தக் கொள்கைக்கா தொடங்கப்பட்டதோ, அதில் நான் உறுதியாகஇருக்கிறேன், இருப்பேன். நான் கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். தொடர்ந்துவைகோ தலைமையில் செயல்படுவேன் என்றார்.

மதிமுக மீதும் வைகோ மீதும் தலைவர்களும் தொண்டர்களும் நம்பிக்கை இழந்ததற்குஇரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் காரணம், கட்சியைஅதிமுகவிடம் அடகு வைத்துவிட்டார் வைகோ என்பது.

ஜெயலலிதாவை அதிமுக மாவட்டச் செயலாளர்களை விட அதிகமாக புகழ்ந்துவருவதை வைகோவின் தொண்டர்களே ரசிக்கவில்லை.

அடுத்த காரணம் விஜய்காந்தின் அசுர வளர்ச்சி. கட்சியை ஆரம்பித்தவுடன்மதிமுகவையும் தாண்டி அதிக வாக்குகள் பெற்று வைகோவை பின்னுக்குதள்ளிவிட்டார் விஜய்காந்த்.

மேலும் இதுவரை வைகோவுக்கு முழு ஆதரவாக இருந்த தெலுங்கு பேசும் இனமக்களின் வாக்குகளும் விஜய்காந்த் வளைத்துவிட்டார். இதனால் மதிமுகவின்எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.

இந்த காரணங்களால் தான் இனியும் மதிமுகவில் நீடித்து பயனில்லை என மூத்ததலைவர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் எல்.ஜி., செஞ்சியார், கண்ணப்பன் உள்ளிட்ட பழைய பிரமுகர்களைமீண்டும் வரவேற்க திமுக தரப்பும் தயாராக உள்ளதாக அக்கட்சியினர் கருத்துதெரிவிக்கின்றனர். இவர்கள் தவிர சில மாவட்ட செயலாளர்களும் மதிமுகவிலிருந்துவிலகக் கூடும் எனத் தெரிகிறது.

விரைவில் அனைவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மாலை போட்டுவாழ்த்துக்களைப் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதிமுகவிலிருந்துமுக்கிய தலைகள் வெளியேற முடிவு செய்திருப்பது திமுக தரப்பில் பெரும் உற்சாகஅலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் தன்னை விட்டு விலகக்கூடும் என்று வைகோவும் எதிர்பார்த்துத் தான் வந்தார். மாவட்ட, ஒன்றிய அளவிலானநிர்வாகிகளை தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசிவந்தார்.

வைகோ தற்போது நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ தனது ஆண்டிப்பட்டிபொதுக் கூட்டத்தில் எல்.ஜி, செஞ்சி ராமச்சந்திரனுக்கு பதிலளிக்கக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவிலிருந்து வைகோ விலகி மதிமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு தோளோடுதோளாக நின்றவர் எல்.கணேசன். பல மாவட்ட திமுக செயலாளர்களை மதிமுகவுக்குஇழுத்து வந்தவர்களில் அவரும் முக்கியமானவர். வைகோவுக்கு மிகவும் நெருக்கமாகஇருந்து வந்த எல்.ஜியே கட்சியை விட்டு விலகப் போவது அரசியல் வட்டாரங்களில்முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

மேலும், மதிமுக தோன்றியதிலிருந்து இதுவரை எந்தவிதப் பிளவும் இல்லாமல்கட்சியை படு கட்டுக் கோப்பாக கொண்டு சென்று கொண்டிருந்தார் வைகோ.தற்போது முதல் முறையாக பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதைவைகோ எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏற்கனவே திருமாவளவனை திமுக கூட்டணி அதிமுக கூட்டணியிலிருந்து கவர்ந்தது.பின்னர் மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் திமுகவுக்குஆதரவாக மாறினார். தற்போது மதிமுகவே உடையும் நிலை ஏற்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+