வைகோவுக்கு 18 மா.செக்கள் நோட்டீஸ்?
சென்னை:கட்சியின் வரவு, செலவு குறித்த கணக்கை காட்டக் கோரி மதிமுகவின் 18 மாவட்டசெயலாளர்கள் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.இதனால் மதிமுகவில் மிகப் பெரிய அளவில் பிளவு ஏற்படும் எனத் தெரிகிறது.
மதிமுகவில் முதல் முறையாக மிகப் பெ>ய அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. மூத்ததலைவரான எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோர் வைகோவுக்கு எதிராக பகிரங்கமாக, பரபரப்பாக கருத்துவெளியிட்டுள்ளனர்.
இருவரும் விரைவில் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவார்கள் என்றஎதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந் நிலையில் கட்சியின் பொதுக் குழுவைஉடனடியாக கூட்ட வேண்டும், கட்சியின் நிதி குறித்த கணக்கை காட்ட வேண்டும்என்று கோரி 18 மாவட்ட செயலாளர்கள் வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகபுதிய தகவல் வெளியாகியுள்ளது.அந்த நோட்டீஸில்,
கட்சியின் நிதியிலிருந்து சமீபத்தில் ரூ. 10 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. எதற்காகஎடுக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும், செலவுக்கு கணக்கு காட்டவேண்டும்.
முக்கிய பிரச்சினைகளில் கட்சியை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாககொள்கை முடிவுகளை கட்சித் தலைமை எடுப்பது ஏன்?
முல்லைப் பெ>யாறு பிரச்சினையில் கட்சியை கலந்து ஆலோசிக்காமல் நடைபயணம்மேற்கொண்டது ஏன்?
உள்ளாட்சித் தேர்தல் வரையிலும் தான் அதிமுகவுடன் கூட்டணி என பொதுக்குழுவில்முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பது ஏன்?
அதிமுக எடுக்கும் முடிவுகளை கட்சியில் கலந்து ஆலோசிக்காமல் அப்படியேபின்பற்றுவது ஏன்?
பெரியாருக்கு சிலை வைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகடுமையாக விமர்சித்துள்ளார். விடுதலைப் புலிகளையும் அவர் கடுமையாகவிமர்சிக்கிறார். பிரபாகரன் உள்ளிட்டோருக்கு விரைவில் தூக்குத் தண்டனையைநிறைவேற்ற வேண்டும் எனவும் கூறி வருகிறார். இதையெல்லாம் அமைதியாகபார்த்துக் கொண்டு இருப்பது ஏன்?
திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேர ரூ. 40 கோடி பணத்தைவைகோ வாங்கினார் என்ற செய்திக்கு இதுவரை ஏன் தெளிவான, உறுதியானவிளக்கம் அளிக்கவில்லை?
திருச்சியில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து கேட்டபோது ரூ. 50 கோடி என்று நீங்கள்திருத்திக் கூறியதன் பின்னணி என்ன? அதற்கான விளக்கம் என்ன?
இவ்வாறு அந்த நோட்டீசில் பல கேள்விகள் உள்ளதாகத் தெரிகிறது.
தற்போது நடைபயணத்தில் உள்ள வைகோவுக்கு இந்த நிகழ்வுகள் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளதாகவும், நடைபயணத்தை முடித்து விட்டு அடுத்த கட்டநடவடிக்கையில் இறங்க அவர் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications