நடுரோட்டில் கள்ளக் காதலியைக் கொன்ற ஏட்டு
சென்னை:சென்னை புரசைவாக்கத்தில் நடு ரோட்டில் வைத்து தனது கள்ளக்காதலியைக் குத்திக்கொன்ற தலைமைக் காவலர், பின்னர் போலீஸில் சரணடைந்தார்.
![]() |
பெரம்பூர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். 54 வயதாகும்இவர் ரயில்வே போலீஸில் தலைமைக் காவலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.தற்போது தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக இருந்து வருகிறார்.
இவரது மனைவி ரதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ரதி அப்பகுதியில்ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ரதிக்கும், செம்பியம் பகுதியைச் சேர்ந்த மத்திய குற்றப்பிரிவில் தலைமைக் காலவராக பணியாற்றி வரும் ராமலிங்கத்திற்கும் இடையேகள்ளக்காதல் ஏற்பட்டது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருப்பது வழக்கமாம். இந்தநிலையில் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு ரதி சென்றார். அப்போதுஅங்கு ஒருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த ராமலிங்கத்தின் கண்ணில் இது பட்டுள்ளது. நேராக ரதியிடம்வந்த அவர், யார் இவன், எதற்காக இவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்,உங்களுக்குள் என்ன தொடர்பு என்று கேட்டு சண்டை போட்டுள்ளார்.
பின்னர் ராமலிங்கம் தனது வீட்டுக்குப் போய் விட்டார். நேற்று காலை ரதியின்வீட்டுக்கு அவர் போனார். வீடு பூட்டியிருந்ததால் திரும்பி விட்டார். பின்னர்மாலையில் மீண்டும் வீட்டுக்குப்போனார். அப்போது ரதி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், நேற்று பேசிக் கொண்டிருந்த நபர் யார் என்றுவிசாரித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து ரதியைக் குத்தியுள்ளார். அவரிடமிருந்து தப்ப ரதிவீட்டை விட்டு வெளியே ஓடினார். ஆனாலும் விடாத ராமலிங்கம் நடு ரோட்டில்துரத்தி துரத்தி ரதியை குத்தி கொன்றார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரதி சற்று நேரத்தில் பிணமானார். பின்னர் தனதுபைக்கை எடுத்துக் கொண்டு செம்பியம் காவல் நிலையம் சென்ற ராமலிங்கம் அங்குசரணடைந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமலிங்கத்தைகைது செய்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications