முல்லை: ராணுவ பாதுகாப்பு வேண்டும்-வைகோ
மதுரை:முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர்ந்த மத்திய அரசு ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்த அணை பிரச்சனையில் தமிழகத்தில் நியாயத்தை எடுத்துக் காட்ட நடை பயணம் மேற்கொண்டுள்ள வைகோஉசிலம்பட்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் இந்த நடைபணத்தை தொடங்கியுள்ளோன். மதுரைமாவட்டத்தில் செக்காணூராணியிலும், உசிலம்பட்டிக்கும் வரும் வழியில் ஏழை தாய்மார்கள், வயல் வரப்புகளிலேஅந்த கொளுத்துகிற வெயிலில், ஓட்டமும், நடையுமாக வந்த காட்சி கண்டு மனம் கலங்கி போய் என்நடைபணத்தை நிறுத்தினேன். அவர்கள் வரும் வரை காத்திருந்தேன்.
அவர்கள் என்னிடம் கூறுகையில், நெல் விலை குறைந்து தான் இருக்கிறது. ஆனால் உரத்தின் விலையை உயர்த்திவிட்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில் விளைவிக்கக் கூடிய நெல்லுக்கு ஆகும் சொலவை விட குறைந்த விலையில் தான்நெல் விற்கபடுகிறது. இதனால் நட்டம் தான் ஏற்படுகிறது என்று கூறினார்.
முல்லை பெரியாறு அணையின் உரிமையை நாம் இழந்தால் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டத்தைஉயர்த்தாமல் கேரளா, புதிய அணையை கட்டும். இது எதிர்காலத்தில் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பைஏற்படுத்தும். புதிய அணையை கட்ட ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நமது உரிமையை 142 அடியாக உயர்த்த வேண்டும். அதற்கு மத்திய அரசுராணுவ பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.
கடமை தவறிய தமிழக அரசு:
முன்னதாக செக்கானூரணியில் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு தனது கடமையிலிருந்து தவறி விட்டது.
இதை புரிந்து கொண்டுதான் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி தமிழகத்தின் உரிமைகளை முழுமையாக பறிக்கும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாகஇறங்கி விட்டது.
136 அடிக்கு மேல் ஒரு சொட்டு நீரைக் கூட தேக்கி வைக்க விட மாட்டோம் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது. மேலும், அணையின்பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட நிர்வாகத்தை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் கேரளா வலியுறுத்தியுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் கேரள சட்டசபையில் புதிய சட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். உச்சநீதிமன்றம் கேரள அரசின் சட்டத் திருத்தத்தையும்ரத்து செய்து விட்டது.
ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றம் கொடுத்த பொன்னான தீர்ப்பை அமல்படுத்தாமல் தனது கடமையிலிருந்து தவறி விட்டது. அதனால்தான்மீண்டும் பேச்சுவார்த்தை என்ற துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை கையில் வைத்திருக்கும்போது 142 அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்கியிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழகஅரசு அமல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இரண்டும் நடக்கவில்லை.
142 அடி உயரத்திற்கு நீரைத் தேக்குவது தமிழகத்தின் உரிமை. புதிய அணை கட்டுவதால் ஒரு பயனும் இல்லை. கூட்டாட்சி தத்துவம் உள்ள இந்தியாவில்மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான கண்ணோட்டம், மன ஓட்டம், கருத்தோட்டம் இருக்கிறது.
இந்த விஷயத்தில், உலகளாவிய பார்வையில் தாங்கள் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கட்யினர் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் சார்ந்தமுதல்வரான அச்சுதானந்தனோ தேசியப் பார்வையில் கூட செயல்படவில்லை என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications