ஓடும் பஸ்சில் டிரைவர் சாவு- பஸ் கவிழ்ந்தது
சேலம்:சேலத்தில் ஓடிக் கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து கட்டுப்பாட்டைஇழந்த பஸ் ஏரியில் பாய்ந்து கவிழந்ததில் 3 பெண் பயணிகள் படுகாயமடைந்தனர்.
![]() |
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மல்லூருக்கு இன்று காலை தனியார் டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.அதை சந்திரமோக் (40) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். பஸ்சில் 23 பேர் இருந்தனர்.
அம்மா பாளையம் என்ற இடத்தில் ஏரிக் கரையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனர் சந்திரமோகனுக்குதிடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்த அவர், மார்பை பிடித்தபடி ஒரு கையால்பஸ்ஸை ஓட்டினார்.
இதைப் பார்த்த கண்டக்டர் டிரைவரிடம் ஓடினார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய சந்திரமோகன்,உடனே டாக்டரிடம் காட்ட வேண்டும், மருத்துவமனைக்கு பஸ்ஸை ஓட்டுகிறேன் என்று கூறியபடி பஸ்ஸைஇயக்கினார்.
பேசிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்டிரிங் வீலிலேயே சரிந்து விழுந்தார்சந்திரமோகன். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்தது.
இதைப் பார்த்த கண்டக்டரும் சில பயணிகளும் அலறியபடி ஸ்டியரிங் வீலை பிடித்து திருப்ப முயற்சித்தனர். சிலர்பிரேக்கை மிதிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் ஏரிக்குள் பாய்ந்த பஸ் கவிழ்ந்தது. இதில் 3 பெண் பயணிகள்படுகாயமடைந்தனர்.
பஸ்சின் முன் பகுதி ஏரி தண்ணீருக்குள் விழுந்தது. ஆனால் பின் பாதி தரையில் இருந்தது. இதனால் பின் பக்கம்வழியாக பயணிகள் அனைவரும் வெளியில் குதித்து தப்பினர்.
மயங்கி விழுந்த டிரைவர் சந்திரமோகனை பயணிகள் மீட்டபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. அவரதுஉடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சில நாட்களுக்கு முன் சென்னையில் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவர்பஸ்ஸை நிறுத்திவிட்டு மயங்கி பலியானதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications