கேட்டை தாண்ட முயன்று இறந்த புள்ளி மான்
சென்னை:சென்னை கிழக்கு தாம்பரத்தில், வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த புள்ளி மான், வீட்டு இரும்புகேட்டை தாண்ட முயன்று, கம்பி குத்தி துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
தாம்பரம் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து ஒரு புள்ளி மான் கிழக்குத் தாம்பரம் பகுதியில் நேற்று இரவு இரைதேடி ஊடுறுவியது. அங்கு உள்ள வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைவதற்காக சுற்றுச் சுவர் மீது தாவிக்குதிக்க முயன்றது.
ஆனால் சுவர் மீது ஏற முடியாததால், வீட்டின் முன் வாசலில் இருந்த இரும்புக் கேட்டைத் தாண்டி செல்லமுயன்றது. ஆனால் கேட் உயரமாக இருந்ததால், முழுமையாக தாண்ட முடியாமல் இரும்புக் கம்பியில் சிக்கிக்கொண்டது.
இதனால் மானின் வயிற்றுப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. சில நிமிடங்களில் அந்த மான் பரிதாபமாகதுடிதுடித்து உயிரிழந்தது. இன்று காலை வங்கி அதிகாரியின் குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே வந்தபோதுஉயிரிழந்து கிடந்த மானைப் பார்த்து அதிர்ந்து போயினர்.
அவர்கள் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். பின்னர் தாம்பரம் நகராட்சி கவுன்சிலர்கலைச்செல்வி ஜோதிக்குமாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் போலீஸாருக்கும், வனத்துறையினருக்கும்தகவல் தெரிவித்தார்.
போலீஸாரும், வனத்துறையினரும் விரைந்து வந்து இறந்த மானின் உடலை மீட்டனர். அந்த மானுக்கு 7 வயதுஇருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மானின் எடை 55 கிலோவாக இருந்தது.
இறந்த மானின் உடலில் அங்கேயே பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் புதைப்பதற்காகவனத்துறையினர் மானை எடுத்துச் சென்றனர். இரும்புக் கேட்டில் சிக்கி மான் பரிதாபமாக உயிரிழந்ததுஅப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications