மதீனாவில் நுழைந்த இந்தியர் தலை தப்பியது
துபாய்:மதீனா நகரில், முஸ்லீம்கள் மட்டுமே செல்லக் கூடிய பகுதிக்குள் நுழைந்த கேரள தொழிலாளர், தலை தப்பியதுதம்பிரான் புண்ணியம் என்ற கதையாக, மரண தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஜோஜோ ஜோசப். சவூதியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு இந்தவாரத் தொடக்கத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு விரைந்தார்ஜோசப்.
அப்போது மதீனா நகரில் முஸ்லீம்கள் மட்டுமே புழங்கக் கூடிய பகுதிக்குள் நுழைந்து விட்டார் ஜோசப்.இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும், மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால் ஜோசப்பை சவூதி போலீஸார் விடுவித்து விட்டதாக சவூதிக்கான இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பரூக்கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் தவறுக்காக ஜோசப்புக்கு கடுமையான தண்டனை எதுவும்விதிக்கப்பட மாட்டாது.
அவரை போலீஸார் சிறையில் அடைக்கவில்லை, மரண தண்டனையும் விதிக்கப்படவில்லை. அதுபோலவெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. நான் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு விடுவேன் என்றுஜோசப் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் செவ்வாய்க்கிழமையேவிடுவிக்கப்பட்டு விட்டார்.
3 நாட்கள் மட்டுமே அவரை போலீஸார் தங்கள் வசம் வைத்திருந்தனர். வேண்டும் என்றே அவர்முஸ்லீம்களுக்கான பகுதியில் நுழையவில்லை என்பதை அறிந்ததால் போலீஸார் அவரை விட்டு விட்டனர்என்றார் பரூக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications